Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

பிரபாகரன் கொல்லப்படுவதற்கு முன் கருணாநிதிக்கு அறிவிக்கப்பட்டது : சுப்ரமணியம் சுவாமி

Prabhakaran-LTTE-mவன்னிப் படுகொலைகளை இலங்கை அரசு நிகழ்த்தி முடித்த நாளிலிருந்து வருடாவருடம் சர்வதேசப் பாதுகாப்பு மாநாட்டு ஒன்றை இலங்கை அரசு நடத்தி வருகிறது. அங்கு மக்களை சாரி சாரியாகக் கொன்றுவிட்டு யாருக்கும் பயப்படாமல் எப்படி இன்னும் வாழ்கிறோம் என்று அவர்கள் தமது கொலை வெறியைப் பெருமையாகப் பேசிக்கொள்ள புலி சார் அமைப்புக்கள் மக்களை நம்பக் கோரும் ‘சர்வதேச சமூகம்’ உட்கார்ந்து விசிலடித்துக் கைகுலுக்கிக் கொள்ளும்.

கடந்தவாரம் நடைபெற்ற மாநாட்டில் தமிழின விரோதியும் ஜனதாக் கட்சித் தலைவருமான சுப்பிரமணிய சுவாமியும் கலந்துகொண்டார்.அந்தக் கூட்டத்தில் யுத்தத்தைத் தலைமை தாங்கிய இராணுவ அதிகாரிகள், வெளி நாட்டு இராணுவ அதிகாரிகள், கோத்தாபய, போர்க்குற்றத்தில் ராஜபக்சவைத் துக்கிலிடப் போகிறோம் என்று மக்களை ஏமாற்றும் நாடுகள் போன்ற பலர் கலந்துகொண்டன.

“இறுதி யுத்தத்தில், விடுதலைப் புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் கொல்லப்பட போகிறார் என்பதும், இதோ, கொல்லப்பட்டு விட்டார் என்பதும், கருணாநிதிக்கு அறிவிக்கப்பட்டது. கருணாநிதி இந்த விஷயத்தில் தலையிடாமல் மெளனம் சாதித்தார்.” இவ்வாறு கூறியுள்ளார், சுப்ரமணியம் சுவாமி.
இது உண்மையானால், இந்தக் கூற்று போர்க்குற்றத்துடன் நெருங்கிய தொடர்புடைய ஒன்று. ஆனால் யாருமே சுவாமியின்பேச்சை எந்த மறுப்பும் தெரிவிக்காமல் கேட்டுக்கொண்டிருந்தனர்.

ஆக, சுப்பிரமணிய சுவாமி சுமத்திய போர்க்குற்றதைப் பொது மேடையில் ஏனை அனைவரதும் முன்னால் மறுப்புத் தெரிவிக்காமல் இலங்கை அரசு ஏற்றுக்கொள்ள ஏனையவர்கள் பார்த்துக்கொண்டிருந்தனர். இது ஒரு புறமிருக்க கருணாநிதியின் ‘தமிழ் உணர்வும்’ திருட்டுத்தனமும் அம்பலத்திற்கு வந்துள்ளது. போரின் ஒவ்வொரு நகர்வுக் ‘மூத்த தமிழ் உணர்வாளர் கருணாநிதிக்குச் சொல்லப்பட்டது என்றும் சுவாமி சொல்லியிருக்கிறார்.

இதை எல்லாவற்றையும் விட கருணாநிதி குறித்த இந்தத் தகவல்களுக்குக் அவரையும், இலங்கை அரசைப் போர்குற்றத்திற்குதிற்கும் தண்டிக்க வேண்டும் என்று பேஸ்புக் உணர்வாளர்களும், தமிழ் உணர்வாளர்களும் கொதித்து எழவில்லையே ஏன்?

இது அவர்களை எங்கோ உதைத்திருக்க வேண்டும். மாவீரர் தினம் அண்மிக்கின்ற வேளையில் சிக்கல் ஆரம்பித்துள்ளது.
மரணித்தவர்களை வைத்து தாம் பிழைத்துக் கொள்வத்காக இலங்கை அரசையே காப்பாற்றத் துணியும் அயோக்கியத்தனம் கொண்டவர்களா இவர்கள் என்ற கேள்விகள் எல்லம் தொக்கு நிக்க, சுப்பிரமணியன் சுவாமி தாக்குதல்களிலிருந்து தப்பிக்கொண்டார்.

இதன் பிறகாவது போராடத் தலைப்படும் மக்களைத் தலைவர் வருவார் என்று வீட்டுக்குள் முடக்கி இலங்கை அரசிற்கு ‘தமிழ் உணர்வாளர்கள் உள்ளிட்ட பல்வேறு உணர்வாளர்களும்’ சேவை செய்ய மாட்டார்கள் என நம்பத் தலைப்படுவோமாக.

மூலச் செய்தி : விறுவிறுப்பு இணையம்

Exit mobile version