Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

பிரபாகரன் உயிருடன் பிடிக்கப்பட்டு, சுட்டுக் கொல்லப்பட்டார்..

தமிழீழ விடுதலைப் புலிகளுக்ளின் தலைமை மற்றும் பிரபாகரனின் மெய்ப் பாதுகாவலர்கள் இலங்கை இராணுவத்தின் விசேட படைப் பிரிவுடன் நடாத்திய துப்பாக்கிவேட்டுச் சம்பவங்களின் பின்னர், புலிகளின் தலைமையும் பிரபாகரனின் மெய்ப் பாதுகாவலர்களும் சரணடைந்ததாக இலங்கை இராணுவத்தின் உளவுப் பிரிவுடன் நெருக்கமான வட்டாரங்கள் தமக்குத் தெரிவித்ததாக டெக்கன் ஹெரால்ட் என்ற இந்திய வாரப் பத்திரிகை தெரிவித்துள்ளது

நடேசனும் புலித்தேவனும் அவர்களுடைய குடும்பத்தாருடன் வெள்ளைக் கொடிகளை உயர்த்தியபடி சரணடைய முற்பட்டபோது இயந்திரத்துப்பாக்கிகளால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
அவர்கள் முழங்காலில் மண்டியிட்டு கருணைகாடுமாறு மண்டாடியதாகவும், ஆனால் விசேட இராணுவப் படைகளால் எந்தக் கருணையும் காட்டப்படவில்லை” என்று மேலும் அவ்வட்டாரங்கள் தெரிவித்தன.

வெள்ளமுள்ளி வாய்க்காலில் பிரபாகரனின் மறைவிடத்தை விசேட இராணுவப் படையினர் இரண்டு நாட்களின் முன்னதாகவே வெசேட இராணுவப் படையினர் கண்டறிந்து விட்டதாக மேலும் அவ்வட்டாரங்கள் தெரிவித்தன.

ஷண்முகலிங்கம் சிவசங்கர் அல்லது பொட்டம்மான், பிரபாகரனின் குடும்பத்தினர் மற்றும் அவரின் மெய்ப்பாதுகாவலர்கள் தவிர மற்றும் ஒரேயொரு நபரே பிரபாகரனின் மறைவிடத்தைத் தெரிந்து வைத்திருந்தார், அவர்தான் ரீகன் என்ற புலிகளின் மருத்துவப் பிரிவுப் பொறுப்பாளர்.

மே மாதத்தின் முதல் வாரத்தில் ரீகன் இலங்கை இராணுவத்தால் கைது செய்யப்பட்டிருந்தார். இராணுவ விசாரணைகளின் போது பிரபாகரனின் மறைவிடத்தைக் காட்டிக்கொடுத்தவர் அவரே என நம்பப்படுகிறது.

ரீகனுடைய தகவல்கள் புலிகளின் மருத்துவரான சசிரன் என்பவரின் தகவல்களுடன் உறுதிசெய்யப்பட்டது. மே 10ம் திகதி புலிகளின் தலைவர் பிரபாகரனின் மிகுந்த நம்பிக்கைக்குரிய ராதா படைப்பிரிவின் தலைவரான சிதம்பரதாசனிற்கு மருத்துவ சேவை செய்வதற்காக, சசிரன் பிரபாகரனைப் பார்க்கச் சென்றிருந்தார்.

எஞ்சியிருந்த போராளிகள் நிர்மூலமாக்கப்பட்டால், புலிகளின் தலைமை தப்பியோடுவதற்கான கூரிய திட்டமொன்றை வைத்திருந்ததாக ரீகன் இராணுவத்திற்குத் தகவல் வழங்கியிருந்தார்.

முல்லைத் தீவு ஏரியைக் கடந்து முல்லைத்தீவு-வெலி ஓய காட்டுகளூடாக திருகோணமலையைக் கடந்து பின்னர் கிழக்கு மகாணத்தை அடைவதாகவும் அங்கிருந்து கேணல் ராம் இன் உதவியுடன் நாட்டிலிருந்து தப்பிவிடுவதாகவுமே அத்திட்டம் அமைந்திருந்ததாக ரீகன் தெரிவித்திருந்தார்.

மே 17ம் திகதி கடற்பகுதித் தாக்குதல் ஒன்றை மேற்கொண்டதாகவும், இராணுவத்தின் 53ம் படைப் பிரிவின் கட்டுப்பட்டிலிருந்த ஒருபகுதியை ஊடறுத்துக் கைப்பற்றியதாகவும், தெரிவித்த இவ்வடாரங்கள், இராணுவத்தின் பதுங்கு குழியொன்றைக் கைப்பற்றிய புலிகள் 15 இராணுவத்தினரைக் கொன்று அங்கிருந்த அம்புலன்ஸ் ஒன்றைக் கைப்பற்றியதாகவும் மேலும் தெரிவித்தன.

ஆரம்பத்தில் இம் மருத்துவ வாகனம் பிரபாகரனும் அவரது மெய்ப் பாதுகாவலர்களும் தப்பிச்செல்லப் பாவிக்கப்படுவதாக இருந்ததா என்பது தெளிவில்லாமல் இருந்தாலும், ஆரம்பத்தில் சில வட்டாரங்கள் பிரபாகரன் இவ்வாகனத்தில் வைத்தே சுட்டுக் கொல்லப்பட்டார் எனத் தெரிவித்தன.

எவ்வாறாயினும், பிரபாகரனும் அவரது மெய்ப்பாதுகாவலர்களும் துப்பாக்கிப் பிரயோகத்தை நிறுத்திவிட்ட நிலையில் இராணுவத்தின் 59 வது படைப் பிரிவும், விசேட இராணுவப் படைப்பிரிவும் நெருங்கிய நிலையில் தப்பிச் செல்வது என்பது சாத்தியமற்றதாகக் காணப்பட்டதாகவும், தெரிவிக்கப்படுகிறது.
எந்தக் காயமும் காணப்படாத நிலையிலும், குண்டுதுழைத்த காயமென்பது பக்க நெத்திகுச் சற்று மேலான பகுதியில் காணப்பட்டதாலும், அருகிலிருந்தே அவர் கொல்லப்படிருப்பது தெளிவாகிறது. என அப்பத்திரிகை மேலும் தெரிவித்துள்ளது.

Exit mobile version