Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

பிரபாகரன் இறக்கவில்லை – ராஜபக்சவுடன் வியாபாரம் செய்யும் வியாபாரிகள்

Prabaharnதென்னிந்தியாவின் மிகப்பெரும் கல்வி வியாபாரியான பச்சைமுத்து தயாரித்த புலிப்பார்வை திரைப்படம் ஈழ வியாபாரத்தின் மற்றொரு முகம். ஈழப் போராட்டம், அதன் வரலாற்றுப் பரிமாணம் இன்றைய ஈழத் தமிழர்களின் வலிகள், இயக்கங்கள் தொடர்பான குறைந்தபட்ச அறிதல் போன்ற எதுவுமின்றி அரசியல்வாதிகளிலிருந்து சினிமாக்காரர்கள் ஈறாக தன்னார்வ நிறுவனங்கள் வரை ஈழத் தமிழர்களின் கண்ணீரையும் அவலங்களையும் வெறுமனே பணத்திற்கும் அதிகாரத்திற்குமான மூலதனமாகவே பயன்படுத்திக்கொள்கின்றன. பொழுதைப் போக்குவதை நோக்கமாகக் கொண்டு சமூகத்தின் யதார்த்த நிலைக்குப் பொருந்தாத கற்பனை உலகத்தை மக்களுக்கு அறிமுகப்படுத்தி அவர்களைச் சிந்திக்கவிடாமல் தடுக்கும் சினிமாக் கூத்தாடிகளின் ஈழ வியாபாரத்தில் அண்மைக் காலமாக ஈழப் பிரச்சனையும் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளது. அந்த வகையில் லைக்கா நிறுவனத்தின் சுபாஸ்கரன், கல்வி வியாபாரி பச்சைமுத்து ஆகிய பணக்காரர்கள் சினிமா வர்த்தகத்துள் நுளைந்துள்ளனர்.

இந்தை இரண்டு படத்தயாரிப்பாளர்களிடையேயும் பல ஒற்றுமைகள் உண்டு. இருவருமே தமிழர்கள் மத்தியில் வியாபாரம் செய்து பணக்காரர்கள் ஆனவர்கள். இருவருக்குமே அரச தொடர்புகள் பல்வேறு தளங்களில் உண்டு. இரண்டு பேருமே ஊடக் வியாபாரத்தோடு தொடர்புடையவர்கள், இரண்டு பேரும் இலங்கை அரசுடன் வியாபார பேரத்தில் ஈடுபட்டவர்கள். லைக்கா ஸ்கைநெட் என்ற நிறுவனத்தை ராஜபக்ச குடும்பத்துடன் இணைந்து ஆரம்பித்து இலங்கையிலுள்ள ஏழை மக்களின் பணத்தில் நூறு மில்லியனைச் சுருட்டிக்கொண்டது. பச்சைமுத்துவின் கல்வி வியாபார நிலையம் இலங்கையில் முகவர் நிலையத்தைக் கொண்டுள்ளது. இலங்கையில் தனியார் பல்கலைகழகம் அமைக்க முயற்சிக்கிறது.

பச்சைமுத்துவின் புலிப்பார்வை இசைத்தட்டு வெளியீட்டில் ‘செந்தமிழன்’ சீமானின் முன்னிலையில் படத்திற்கு எதிராக குரலெழுப்பியவர்கள் தாக்கப்பட்டமை தெரிந்ததே. பச்சைமுத்து நேரடியாகவே பல தடவை ஈழப் போராட்டத்திற்கு எதிராக வெளிப்படையாகப் பேசியவர். ஏழை மாணவர்களின் இலவசக் கல்வி உரிமையைக் கொள்ளையடித்து கொழுத்த பச்சை முத்துவின் பார்வை நீண்டகாலத்தின் முன்பே ஈழப் போராட்டத்தில் விழுந்திருந்தமை அதற்கு எதிரான அவரது பேச்சுக்களிலிருந்து தெரியவருகிறது.
கத்தி படத்தை சிக்கலிலிருந்து விடுவிக்க அதன் தயாரிப்பாளர் தானும் தமிழன் தான் தனக்கும் தமிழுணர்வு இருக்கிறது என்று ஈழ மக்களின் கண்ணீரின் சில துளிகளை தனது வியாபார நஞ்சினுள் கலந்து அதன் இசை வெளியீட்டு விழாவில் பேசினார்.

இப்போது பச்சை முத்த்துவின் இயக்குனர் பிரபாகரன் இன்னும் வாழ்வதற்குச் சாத்தியங்கள் உள்ளன என மேடையில் பேசியதை தமிழ் ஊடகங்கள் தமது தளங்களில் இணைத்துப் பெருமையடித்து மகிழ்கின்றன. ஈழப் போராட்டத்திற்கு சங்கு ஊதிய அதே ஊடகங்களே இன்று பச்சை முத்துவின் தயாரிப்பாளருக்கு விசிலடிக்கின்றன.

இனிமேல் மகிந்த ராஜபக்ச பிரபாரனைத் தேசியத் தலைவர் என்று விழித்தால் அடுத்த தேசியத் தலைவராக மகிந்த நியமிக்கப்பட்டாலும் வியப்பில்லை.
புலிப்பார்வை இயக்குனரின் ஈழ வியாபார வீடியோ:


புலிப்பார்வை சினிமாவைத் தயாரிக்கும் பாரிவேந்தர் பச்சைமுத்து ஈழப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தும் காட்சி:

யாரும் கணக்கெடுக்காத புலிப்பார்வையை பிரபாகரனின் பெயரோடு உயிர்கொடுத்துப் பிரச்சாரம் செய்பவர்கள் தமிழ்வின் – லங்காசிறீ இணையங்கள்.

Exit mobile version