Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

பிரபாகரனை அழைத்துச் செல்ல முயற்சிக்கவில்லை :4 வருடங்களின் பின் செஞ்சிலுவை 180 பாகையில் திரும்பியது

velupillai-prabhakaranதமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை பாதுகாப்பாக அழைத்துச் செல்ல முயற்சி;க்கப்படவில்லை என சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது.2009ம் ஆண்டு மே மாதம் இறுதிக் கட்ட யுத்தத்தின் போது தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை யுத்த வலயத்திலிருந்து பாதுகாப்பாக வெறியேற்ற சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் முயற்சித்ததாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

எனினும், இந்தக் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை என சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் இலங்கைப் பொறுப்பாளர் யாவீஸ் கியோவானோனி தெரிவித்துள்ளார்.இவ்வாறான காரியங்களில் ஈடுபடுவது தமது பணியல்ல என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.உலகில் 80க்கும் மேற்பட்ட நாடுகளில் மனிதாபிமான தொண்டு ஆற்றி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு பிரபாகரனை மீட்க முயற்சித்திருந்தால் எமது நிறுவனத்தின் மனிதாபிமான தொண்டுகளுக்கும், நன்மதிப்பிற்கும் களங்கம் ஏற்பட்டிருக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எந்த சந்தர்ப்பத்திலும் பக்கச்சார்பாக செயற்பட்டதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.எமக்குக் கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில் இந்த விடயத்தில் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் தலையீடு செய்யவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.1992ம் ஆண்டு முதல் தடவையாக இலங்கைக்கு விஜயம் செய்திருந்த போது, புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளுக்கு அரசாங்கம் உணவுப் பொருட்களை விநியோகம் செய்தாகவும் அநேகமாக யுத்தம் இடம்பெறும் வலயங்களில் இவ்வாறு செய்யப்படுவதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் நடவடிக்கை தம்மை பெரிதும் நெகிழச் செய்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.இதேவேளை, சர்வதேச மனிதாபிமான சட்டங்கள் தொடர்பில் படையினருக்கு போதியளவு விளக்கம் அளிக்க வேண்டியது அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Exit mobile version