Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

பிரபாகரனைப் பாதுகாக்க விரும்பிய கோதாபய ராஜபக்ச

தமிழீழ விடுதலைப்புலிகளின் அனைத்து போராளிகளுக்கும் பொதுமன்னிப்பை வழங்க இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச விருப்பம் கொண்டிருந்தார் என அமரிக்காவின் முன்னாள் தூதுவர் ரொபட் ஓ பிளெக் ராஜாங்க திணைக்களத்துக்கு தெரிவித்துள்ளார்.
இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் விடுதலைப்புலிகளுக்கு பொதமன்னிப்பு வழங்க விரும்பினார். எனினும் அதனை பகிரங்கப்படுத்தினால் ஜே.வி.பி, ஜாதிக ஹெல உறுமய மற்றும் தேசிய சுதந்திர முன்னணி ஆகியன அதற்கு தமது கடும் எதிர்ப்பை வெளியிடும் என்ற அச்சம் இருப்பதாக அவர் குறிப்பிட்டதாக அமரிக்காவின் முன்னாள் தூதுவர் ரொபட் ஓ பிளெக் ராஜாங்க திணைக்களத்துக்கு அனுப்பியுள்ள தகவலில் தெரிவித்துள்ளார்.

2009 ஆம் ஆண்டு மே 15 ஆம் திகதி இந்த கோத்தபாய ராஜபக்சவுக்கும் ரொபட் ஓ பிளெக்குக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பின் போது இந்த தகவல் பரிமாறப்பட்டுள்ளது.

தமிழீழ விடுதலைப்புலிகளின் அனைத்துப் போராளிகளுக்கு பொது மன்னிப்பை வழங்கவும் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மற்றும் உளவுத்துறை தலைவர் பொட்டு அம்மான் ஆகியோரை பாதுகாக்கவும் கோத்தபாய இணங்கினார்.

எனினும், அதனை முன்னரங்க போர் நிலைகளுக்கு தெரியப்படுத்துவதால் சிங்கள தேசியவாத கட்சிகளின் எதிர்ப்பை தேடிக்கொள்ள நேரிடும் என்று அவர் குறிப்பிட்டதாக
ரொபட் ஓ பிளெக் ராஜாங்க திணைக்களத்துக்கு தகவல் அனுப்பியதாக விக்கிலீக்ஸ் தெரிவித்துள்ளது

Exit mobile version