தமிழ் மக்கள் தொடர்பில் இன்று முதலைக்கண்ணீர் வடிக்கின்ற வெளிநாடுகள் நினைத்திருந்தால் அன்று யுத்தத்தை நிறுத்தியிருக்க முடியும். எனினும் அரசாங்கத்தைப் பாவித்து பிரபாகரனை கொன்றொழிக்கும் தேவை அவர்களுக்கு இருந்தது. இங்கிருப்பது உள்நாட்டின் எமது பிரச்சினையாகும். எனவே அந்நிய தலையீடுகளின்றி நாமே எமது பிரச்சினையைத் தீர்த்துக் கொள்வோம். இதற்காக தமிழ் மக்களுக்கும் தழிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் அழைப்பு விடுக்கின்றேன் என்று பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
பிரபாகரனை அழிப்பதற்கு மட்டுமல்ல முழு இலங்கையையுமே அன்னிய நாடுகளுக்கு விற்பனை செய்யும் அன்னிய அடிமைகளான ராஜபக்ச குடும்பம் சிங்கள மக்கள் மத்தியில் அனுதாபத்தைத் தேடிக்கொள்வதற்காக மட்டுமே அன்னிய நாடுகளுக்கு எதிராகப் பேசுகின்றனர். முதல் தடவையாக இலங்கையின் இலவசக் கல்வியை முழுமையாக அழித்து அன்னிய பல்தேசியப் பண முதலைகைகளுக்கு விற்பனை செய்த ராஜபக்ச பாசிச அரசு தமிழ் மக்களுக்கு மட்டுமல்ல சிங்கள மக்களுக்கும் எதிரானவர்களே.