நிச்சயமாக. 13ஆவது திருத்தம் தொடர்பிலான எனது கருத்து நான் உறுதியாக இருக்கின்றேன். 13 ஆவது திருத்தமானது பிரபாகரனின் பிரச்சினையைத் தீர்ப்பதற்குத்தானே கொண்டுவரப்பட்டது. ஆனால், பிரபாகரனே அதனை நிராகரித்திருந்தார். அன்று பிரபாகரன் இருந்தபோது பேச வக்கில்லாமல், துணிச்சலில்லாமல் இருந்த தமிழ்க் கூட்டமைப்பு இப்போது 13ஆவது திருத்தத்துக்கு குரல் கொடுப்பதும், கூக்குரலிடுவதும் தான் வேடிக்கையாக இருக்கிறது.
இன,மத,மொழி,ஜாதி, பால் அடிப்படையில் இலங்கையில் எவருக்கும் சந்தர்ப்பங்கள் மறுக்கப்படுவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.இதனை புள்ளி விபர ரீதியில் நிரூபிக்க முடியுமு என அவர் தெரிவித்துள்ளார்.பல்கலைக்கழகங்களில் சகல இனங்களையும் சேர்ந்த மாணவ மாணவியர் கல்வி பயின்று வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். அரசாங்கத்தினால் வழங்கப்படும் சேவைகளில் எவருக்கும் ஒடுக்குமுறைகள் மேற்கொள்ளப்படுவதில்லை என கோதாபய குறிப்பிட்டார்.