பிரபாகரன் கொல்லப்பட்டதனைத் தொடர்ந்து, 13ம் திருத்தச் சட்டத்தை இல்லாதொழிப்பதற்காகவே நாம் ஜனாதிபதிக்கு வரையறையற்ற அதிகாரங்களை வழங்கினோம். இனத் துரோக நடவடிக்கைகளை கட்டுப்படுத்தாவிட்டால் நாடும் இனமும் அழிவுப்பாதையில் செல்வதனை தடுக்க முடியாது.
இந்தியா, ஐரோப்பா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகள் இலங்கை பிளவடைவதனையே விரும்புகின்றன. 2018ம் ஆண்டில் சீனா உலக வல்லரசாக மாற்றமடைந்துவிடும். இதனால் பீதியடைந்துள்ள அமெரிக்கா இலங்கையில் முகாம் ஒன்றை அமைக்க முயற்சிக்கின்றது.இதன் காரணமாகவே அமெரிக்கா இலங்கை விவகாரங்களில் தலையீடு செய்து வருகின்றது என குணதாச அமரசேகர தெரிவித்துள்ளார்.
இந்திய அரசால் முன்மொழியப்பட்ட 13வது திருத்தசட்டம் சிறுபான்மைத் தேசிய இனங்களின் குறைந்தபட்ச உரிமைகளைக் கூட உத்தரவாதப்படுத்தவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.