உலகம் முழுவதும் இடம்பெற்ற அரசுகளின் கிளர்ச்சி முறியடிப்பு நடவடிக்கைகள் தொடர்பான தகவல்கள் அடங்கிய இரகசிய அறிக்கை ஒன்றை சீ.ஐ.ஏ வெளியிட்டிருந்தது. 2009 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 7ம் திகதியன்று வெளியிட்ப்பட்ட கிளர்ச்சி இந்த இரகசிய அறிக்கையை விக்கிலீக்ஸ் மக்கள் மத்தியில் வெளியிட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானில்,(2001- ஜூன் 2009), அல்ஜீரியாவில் (1954-1962), கொலம்பியாவில் (2002-ஜூன் 2009), ஈராக்கில் (2004- ஜூன் 2009), இஸ்ரேலில் (1972 தொடக்கம்1990களின் நடுப்பகுதி, 1990களின் நடுப்பகுதி தொடக்கம், 2009 ஜூன் வரை), பெருவில் (1980-1999), வடஅயர்லாந்தில் (1969-1998) மற்றும் இலங்கையில் (1983 – மே 2009) கிளர்ச்சி முறியடிப்பு நடவடிக்கைகளில் முக்கிய இலக்குகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் தொடர்பாக சீ.ஐ.ஏ இன் இரகசிய அறிக்கை குறிப்பிடுகிறது.
இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் பேச்சாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் கொலைசெய்யப்பட்டது தொடர்பாக அறிக்கை குறிப்பிடுகின்றது.
உலகின் மிகக் கொடூரமானதும் வளங்களைக் கொண்டதுமான கிளர்ச்சி அமைப்பு எனத் தமிழீழ விடுதலைப் புலிகளைக் குறிப்பிடும் அறிக்கை 2002 ஆம் ஆண்டு சமாதானக் காலத்தை தமிழீழ விடுதலைப் புலிகள் தம்மை ஆயுதரீதியாகவும் இராணுவரீதியாகவும் பலப்படுத்தப் பயன்படுத்திக்கொண்டு மீண்டும் யுத்ததை ஆரம்பித்தாகக் குறிப்பிடும் அறிக்கை அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இலங்கை அரசு புலிகளின் தலைவர்களின் இலக்குகளைக் குறிவைத்தாகக் குறிப்பிடுகிறது.
நவம்பர் மாதம் 7ம் திகதி 2007 ஆம் ஆண்டு தமிழ்ச் செல்வனின் மறைவிடம் தொடர்பான தகவல் பிரபாகரனின் மெய்ப்பாதுகாவலர் ஒருவரால் வழங்கப்பட்டதன் அடிப்படையில் அவரும் புலிகளின் வேறு தலைவர்களும் கொலைசெய்யப்பட்டதாக அறிக்கையில் வெளியான தகவல் தெரிவிக்கின்றது.
பிரபாகரனின் மெய்ப்பாதுகாவலர் காட்டிக்கொடுக்க வேண்டும் என்றால் பிரபாகரனின் இருப்பிடம் தொடர்பாகவே தகவல் வழங்கியிருக்கலாம், ஏன் தமிழ்ச் செல்வனின் இருப்பிடம் தொடர்பான தகவல் மட்டும் வழங்கப்பட வேண்டும் என்ற கேள்விகள் எழுகின்றன.
தவிர, தமிழ்ச் செல்வனின் படுகொலை காட்டிக்கொடுப்பின் அடிப்படையிலேயே நடைபெற்றதாக 2007ம் ஆண்டு வன்னியில் செய்திகள் பரவியமை பலருக்கும் தெரிந்திருக்கும்.
முழுமையான அறிக்கை:
https://wikileaks.org/cia-hvt-counterinsurgency/WikiLeaks_Secret_CIA_review_of_HVT_Operations.pdf