அத்துடன், பிரபாகரன் போர் மூலம் நாட்டை பிளவு படுத்தலாம் என்று கண்ட கனவை இன்று போரின்றி தாமாகவே வழங்க அரசு நடவடிக்கை எடுக்கிறது. 13ஆவது திருத்தச் சட்டம், வடக்குத் தேர்தல் ஆகியவை குறித்து ஐ.நா. சபைக்கும், சர்வதேசத்துக்கும் மற்றும் இந்தியத் தலைவர்களுக்கும் அரசு வாக்குறுதி அளித்துள்ளது. இதை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பிலிருந்து என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
நாடு பிளவுபடுவதற்கும் 13 வது திருத்தச்சட்டத்திற்கும் தொடர்புகள் கிடையாது என்பது ஜோசப் பெரேரா தெரிந்துகொள்ளும் வரை அவர் சார்ந்த இனவாதக் கட்சியும் இணைந்தே இலங்கையில் வாழும் சிறுபான்மைத் தேசிய இனங்களைப் போராடத்தூண்டுகிறது என்பது வெளிப்படையானது.
திட்டமிட்ட குடியேற்றங்களால் ஆக்கிரமிக்கப்பட்டு தமிழ்ப் பேசும் மக்கள் சொந்த நிலங்களிலிருந்து துரத்தப்பட்டு சிறுபான்மையாக்கப்பட்டுள்ள கிழக்கில் வாக்கெடுப்பு நடத்தியே வட கிழக்கு இணைந்த மாநிலமாகும் என திருத்தச்சட்டம் கூறுகிறது. தவிர, நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதியே வடகிழக்கு இணைப்பு மட்டுமன்றி ஏனைய நடவடிக்கைகளுக்கும் ஆணையிட வேண்டும். ஆக, 13ம் திருத்தச்சட்டம் எந்தவகையான குறைந்தபட்ச உரிமைகளையும் தமிழ்ப் பேசும் மக்களுக்கு வழங்கப்போவதில்லை.
அது நடைமுறைப் படுத்தப்படுகிறதோ இல்லையோ தமிழ்ப் பேசும் மக்கள் மீதான ஒடுக்குமுறையில் எந்தவகையான பாதிப்புக்களையும் ஏற்படுத்தப் போவதில்லை. சட்டமுலத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதும் அதனை நிராகரிக்க வேண்டும் என்றும் அனல் பறக்க நடக்கும் விவாதங்களும் அன்னி நலன்களுக்கானதாகும். தமிழ்ப் பேசும் மக்களின் நலன்களுக்கு எதிரானதாகும்.
தமிழ்ப் பேசும் மக்களின் விடுதலைப் போராட்டம் பிரபாகரனின் ‘கனவு’ அல்ல. மக்களின் ஒடுக்குமுறைக்கு எதிரான எழுச்சி.