நோர்வே பாராளுமன்ற கேட்போர் கூடத்தில் நடைபெற்ற விசேட கருத்தரங்கு ஒன்றில் கலந்து கொண்ட போது தனி நாட்டுக் கோரிக்கைக்கு “சரவதேச சமூகம்” ஒரு போதும் ஆதரவு வழங்காது எனக் குறிப்பிட்டார். இலங்கைக்குள் தனிநாடு உருவாவதனை சர்வதேச சமூகம் அனுமதிக்காது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரனும் உரையாற்றியுள்ளார்.
இலங்கை வாழ் தமிழ் மக்களை வெளிநாடுகளில் வாழும் தமிழர்களினால் வழிநடத்த முடியாது எனவும், உள்நாட்டில் வாழும் அரசியல் தலைவர்களே தமிழர்களுக்கு தலைமை தாங்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இராணுவத் தீர்வின் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் அதிகளவு நம்பிக்கை கொண்டிருதமையே சமாதான முயற்சிகளை முன்னெடுப்பதற்கு தடையானதாக அமைந்தது எனவும் குறிப்பிட்டார்.