புக்குஷிமா அணு மின் நிலைய விபத்து ஆயிரக்கணக்கில் மனித் உயிர்களைப் பலிகொண்டது மட்டுமன்றி கதிர்வீச்சைக் சுமக்கும் சமூகம் ஒன்றையே உருவாக்கியிருந்தது. இதன் பின்னர் பிரான்ஸ் தனது அணு மின் உற்பத்தி நிலையமான பெஸ்சேயின் நிலையத்தை மூடுவதற்கு முடிவெடுத்திருந்தது. இந்த அணுமின் நிலையத்தில் இன்று ஏற்பட்ட விபத்தில் இரண்டு ஊழியர்கள் தாக்கப்பட்டு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டனர். விபத்து கதிர்வீச்சுச் சார்ந்ததல்ல EDF என அறிக்கை வெளியிட்டிருந்த போதும் இதன் நம்பகத்தன்மை குறித்துக் கேள்வி எழுப்பப்பட்டது. பிரஞ்சு ஜனாதிபதி பிரான்சுவா ஒல்லோந் இந்த அணு மின் நிலையத்தை 2017 ஆம் ஆண்டிற்குள் மூடிவிடுவதாக இன்று அறிவித்துள்ளார்.
இதே வேளை இலங்கைக்கு அருகாமையில் கூடங்குளத்தில் அமைந்திருக்கும் அணு மின்நிலையத்தில் உற்பத்தி ஆரம்பிப்பதற்கான பணிகளை அரசு நிறைவேற்றி முடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.