கைதுசெய்யப்பட்ட மாணவர்களை விடுவிப்பது மற்றும் பல்கலைக்கழகத்தை இயல்பு நிலைக்குத் திருப்புவது தொடர்பில் இன்று காலை காங்கேசன்துறையில் பொலிஸாருக்கும் பல்கலைக்கழக துணைவேந்தருக்குமிடையில் பேச்சுவார்த்தையொன்று இடம்பெற்றிருந்தது.
எனினும், குறித்த பேச்சுவார்த்தை எதிர்பார்த்தளவு வெற்றியளிக்கவில்லை என தெரிவிக்கப்படுவதுடன், பல்கலைக்கழக சுற்றாடலில் போடப்பட்டுள்ள தடைகளை அகற்றுவதாக பிரதிப்பொலிஸ்மா அதிபர் கொடுத்த வாக்குறுதி தற்போதுவரை நிறைவேற்றப்படவில்லை.
மேலும் மாணவர்களுடைய கைது குறித்து தமக்கு எதுவும் தெரியாதெனவும், அனைத்து விடயங்களும் உயர்மட்டத்தினரின் பணிப்பின் பெயரிலேயே இடம்பெற்றதாகவும் அவர் அங்கு குறிப்பிட்டிருக்கின்றார்.
வட கிழக்கில் நடைபெறும் இராணுவ ஆட்சி அதன் அடிமையான டக்ளஸ் தேவானந்தாவினாதோ அன்றி இராணுவ போலீஸ் கூலிகளதோ கட்டுப்பாட்டில் இல்லை. இலங்கை அரச பாசிச இயந்திரத்தால் மேலிருந்து திட்டமிட்டு ஒழுங்கமைக்கப்படும் நிர்வாகத்தின் ஆட்சி. இலங்கை அரச பாசிசத்தின் அடியாட்களில் ஒருவரான பிரதிப்பொலிஸ்மா அதிபருக்குக் கூட அங்கு முடிவெடுக்கும் அதிகாரங்கள் இல்லை என்று ஒப்புதல் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.