Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

பிரதம நீதியரசர் விவகாரம் – அமரிக்க அரசு பின்னணியில்

நம்பிக்கையில்லா தீர்மானம் அதிகாரம் தொடர்பான கேள்விகள் எழுந்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. உச்ச நீதிமன்றின் உத்தரவினை மீறி நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகம் அறிவித்துள்ளது. ஜனநாயக நிறுவனங்களுக்கு இடையிலான அதிகாரப் பொறிமுறைமை தொடர்பில் கேள்வி எழுந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.
நீதிமன்றத்தின் சுயாதீனத்தன்மையை பாதுகாக்கும் நோக்கில் நடத்தப்பட்ட போராட்டங்கள் மீது பிரயோகிக்கப்பட்ட அழுத்தங்கள் தொடர்பில் அமெரிக்கா உன்னிப்பாக அவதானித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளது.
ஜனநாயகமும் அமைதிவழிப் போராட்டங்களும் இலங்கையில் பாதுகாக்கப்பட வேண்டும் என்று அமரிக்கா தெரிவித்துள்ளது.
உலகத்தின் பேட்டை ரவுடியான அமரிக்காவிற்கு ஜனநாயகத்திலும் இலங்கை மக்களிலும் என்ன அக்கறை? இலங்கையில் அமரிக்கத் தூத்ரகம் நாளந்த மக்களின் வாழ்வில் தலையிடுவதற்கு எதிராகவும் மக்கள் போராடவேண்டும்.
இலங்கையில் அமரிக்காவின் தேவை முழுமையான கட்டுபாடே. ராஜபக்ச பாசிசத்தின் இனப்படுகொலை இனச்சுத்திகரிப்புப் போன்ற நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் அமரிக்க அரசு ராஜபக்சவிற்குப் பதிலாக மற்றோர் அடிமையை அமர்த்துவதையே நோக்கமாகக் கொண்டுள்ளது.

2013 – இலங்கை குறித்து அமரிக்காவின் திட்டங்கள் என்ன ? : நிவேதா நேசன்

2012 இல் ஆரம்பித்து 2013 இல் தொடரப் போகும் இனப்படுகொலைகளின் கிரக நிலை : சுதர்சன்

Exit mobile version