Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

பிரசண்டா கன்னத்தில் அறை

நேபாள தலைநகர் காட்மாண்டுவில் தீபாவளி பண்டிகையையொட்டி விருந்து நிகழ்ச்சி நடந்தது. அதில் நேபாள ஒருங்கிணைந்த கம்யூனிஸ்டு கட்சி தலைவர் புஷ்ப கமல் பிரசண்டா மற்றும் கீழ்மட்ட தலைவர்கள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
அனைவரும் பிரசண்டாவுக்கு கை குலுக்கி தீபாவளி வாழ்த்து தெரிவித்தனர். அப்போது பதம் கன்வார் என்பவரும் அவரிடம் கைகுலுக்கினார். அப்போது திடீரென பிரகண்டாவின் கன்னத்தில் பதம் கன்வார் திடீரென பளார் அறைவிட்டார். எதிர்பாராமல் நடந்த இந்த அவமரியாதையால் பிரசண்டா உள்பட அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.
இதற்கிடையே, அவரை அறைந்த நபரை கட்சி தொண்டர்கள் பிடித்து அடித்து உதைத்தனர். பின்னர் அவர் போலீசில் ஒப்படைக்கப்பட்டார். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
இதுகுறித்து காட்மாண்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயம்பகதூர் கந்த் கூறும்போது, பிரகண்டாவை பதம் கன்வர் தாக்கியது ஏன் என தெரியவில்லை, தொடர்ந்து விசாரித்து வருகிறோம் என்றார்.
பதின் மூன்று வருட மக்கள் போராட்டத்தில் வெற்றிபெற்ற புரட்சியை பிரசண்டா அதிகார வர்க்கத்திற்குக் காட்டிக்கொடுத்ததாக அவரது கட்சியின் இராணுவப் பிரிவினர் உட்பட பலர் அதிருப்திகொண்டுள்ள்னர்.
கட்சி பிளவுபட்டு நேபாள கம்யூனிஸ்ட் கட்சி(மாவோயிஸ்ட்) என்ற புதிய கட்சி உருவாகியுள்ளது.

பிரச்ண்டா கன்னத்தில் அறைந்தவர் முன்னை நாள் போராளி என்பது குறிப்பிடத்தக்கது,

Exit mobile version