பினாயக் சென், நாராயன் சன்யால், பியூஸ் குஹா ஆகியோர் மீதான வழக்கில் அவர்கள் நாட்டிற்கு எதிராக சதி செய்து, போரில் ஈடுபட முயன்றார்கள் என்று கூறி, இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகள் 124ஏ, 120பி ஆகியவற்றின் கீழ் குற்றவாளிகளாக அறிவித்த ராய்ப்பூர் நீதிமன்ற நீதிபதி பி.பீ. வர்மா, கடந்த டிசம்பர் மாதம் 24ஆம் தேதி ஆயுள் தண்டனை வழங்கித் தீர்ப்பளித்ததார்.
இதனையடுத்து பினாயக் சென்னை பிணையில் விடுதலை செய்யவேண்டும் என்று சட்டீஸ்கார் உயர்நீதி மன்றத்தில் மனு செய்யப்பட்டது.
இன்று தீர்ப்பளித்த நீதிபதிகள் டி.பி.ஷர்மா, ஆர்.எல். ஜன்வர் ஆகியோர் பிணை மனுவை நிராகரிப்பதாகத் தீர்ப்பளித்தனர்.
இந்தத் தீர்ப்பு குறித்து பினாயக் சென் தாயார் அனுசுயா சென் கூறுகையில், “பிணை மனு நிராகரிக்கப்படும் என்பது எதிர்பார்க்கப்பட்டதுதான், இதனால் நான் ஏமாற்றமடையவில்லை.
உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்வோம் அங்கு நீதி கிடைக்கும் என்று நம்புகிறோம்” என்றார்.