Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

பிணையக் கைதிகளுள் ஒருவரைக் கொன்றனர் மாவோயிஸ்டுகள்.

பீகார்

மாநிலம் லக்கிசார் மாவட்டம் கஜ்ரா போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த கடந்த 29.08.2010 அன்று போலீசாருக்கும், மாவோயிஸ்டுகளுக்குமிடையே கடும் சண்டை நடந்தது. இம்மோதலில் அதில், 8 போலீசார் கொல்லப்பட்டனர். 4 போலீஸ் அதிகாரிகளை மாவோயிஸ்டுகள் கடத்திச் சென்றனர்.சப் இன்ஸ்பெக்டர்கள் ரூபேஷ் குமார், அபய்பிரசாத் யாதவ், பீகார் ராணுவ போலீஸ் உதவி சப் இன்ஸ்பெக்டர் லூகாஸ் டெடே, பீகார் ராணுவ போலீஸ்காரர் எடேஷம்கான் ஆகியோர் கடத்தப்பட்டவர்கள் ஆவர். அவர்களை மாவோயிஸ்டுகள் பிணைக்கைதிகளாக வைத்திருந்தனர்.சிறையில் இருக்கும் 8 மாவோயிஸ்டு தலைவர்களை விடுதலை செய்தால்தான், 4 போலீஸ் அதிகாரிகளையும் விடுவிப்போம் என்று மாவோயிஸ்டுகள் நிபந்தனை விதித்தனர். இதற்கு 1.09.2010 அன்று மாலை 4 மணிவரை அவர்கள் கெடு விதித்தனர். இந்த கெடு நேரத்துக்குள், 8 மாவோயிஸ்டுகளையும் விடுவிக்காவிட்டால், 4 போலீஸ் அதிகாரிகளையும் கொன்று விடுவோம் என்று மிரட்டல் விடுத்தனர்.பிணைக்கைதிகளை நிபந்தனையின்றி விடுவிக்குமாறு பல்வேறு அரசியல் கட்சிகளும், பிணைக்கைதிகளின் குடும்பத்தினரும் மாவோயிஸ்டுகளுக்கு வேண்டுகோள் விடுத்தனர். இதையடுத்து, கெடுவை 02.09.2010 அன்று காலை 10 மணி வரை மாவோயிஸ்டுகள் நீட்டித்தனர். இக்கட்டத்தல் தொடர்பாக மத்திய அரசோ, உள்துறை அமைச்சர் சிதம்பரமோ, பீஹார் மாநில அரசோ அக்கரை காட்டாத நிலையில் கடத்தப்பட்டு பிணைக்கைதியாக இருப்பவர்களில் ஒருவரான சப் இன்ஸ்பெக்டர் அபய்பிரசாத் யாதவை மாவோயிஸ்டுகள் 02.09.2010 அன்று கொலை செய்தனர் இந்தநிலையில், லக்கி சராய் காட்டுக்குள் ஒரு உடல் கிடந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் காட்டுக்குள் சென்று உடலை மீட்டனர். போலீசார் விசாரணை நடத்தியதில் மாவோயிஸ்டுகளால் கடத்தப்பட்ட பீகார் ராணுவ போலீஸ் உதவி சப் இன்ஸ்பெக்டர் லூகாஸ் டெடே உடல் என்பது தெரியவந்தது. இக்கொலை தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரத்திடம் கேட்ட போது மாநில அரசு இது தொடர்பாக எங்களை அணுகவில்லை என்று சொல்லி ஒதுங்கிக் கொண்டார்.

Exit mobile version