Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

பிடெல் காஸ்ட்ரோ மக்கள் மத்தியில் தோன்றினார்

புரட்சியாளரும் கியூபாவின் முன்னாள் ஜனாதிபதியும் பிடெல் காஸ்ட்ரோ(86) விற்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதால் ஆட்சி பொறுப்பை சகோதரரிடம் ஒப்படைத்துவிட்டு ஓய்வெடுத்து வருகிறார். ஆனால் அவரைப்பற்றி தினம் தினம் ஏதாவது ஒரு செய்திகள் வெளியாகி வருகின்றது.
காஸ்ட்ரோ பக்கவாத நோயால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார். இதன் காரணமாக தன்னை சுற்றியுள்ளவர்களை அடையாளம் காண்பதற்கு சிரமப்படுவதாகவும் பேச முடியாத நிலையில் காஸ்ட்ரோ உள்ளதாகவும் அவரை கண்காணித்து வருகின்ற மருத்துவர் ஜோஸ் மார்க்குயினா கூறியுள்ளதாக செய்திகள் வெளியாகின.
அதனை மறுக்கும் வகையில் பல மாதங்களின் பின்னர் பிடல்  கஸ்ரோ  மக்கள் மத்தியில்  தோன்றினார்.
முன்னை நாள் வெனிசூலா உதவிப் பிரதமர்  எலியாஸ் ஜோலா உடன் ஐந்த்து மணித்தியாலங்கள்    நீண்ட  உரையாடல் ஒன்றை நிகழ்த்தியுள்ளார்.
சர்வதேச  அரசியல் உட்பட பல விடயங்களைக் கலந்துரையாடியதாக  அவர் குறிப்பிட்டார்.

Exit mobile version