விலைவாசி உயர்வை கண்டித்து மேற்கு வங்கத்தில் பா.ஜ.க.வினர் முழு அடைப்பு அழைப்பு விடுத்துள்ளனர்.
இன்று காலை 6 மணி முதல் மாலை 6 வரை முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
இதனிடையே ஹவுரா நகரில் பா.ஜ.க.வினர் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போது வன்முறை வெடித்தது.
இதைத் தொடர்ந்து பேருந்துகளுக்கு தீ வைக்கப்பட்டது. இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவுவதால் காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.