பா.சிதம்பரம் சிதம்பரம் ஒரு பொய்யர், ஒரு புறத்தில் இராணுவ எதிர்ப்பு என்பது ஊடகங்களின் மிகைப்படுத்தல் என்று கூறும் இவர் மறு புறத்தில் ஜார்கண்டிலும் சன்டிச்காரிலும் மேலும் மேலும் துருப்புக்களைக் குவித்துவருகிறார் என்று மாவோயிஸ்ட் தலைவர்களில் ஒருவரான கிஷான்ஜீ நேர்காணல் ஒன்றில் தெரிவித்தார். மக்களுக்கு எதிராக இந்திய அரசு கட்டவிழ்த்து விட்டுள்ள போர் அவர்களுக்கு எதிராகவே திரும்பும் என்று மேலும் குறிப்பிட்ட அவர், துருப்புக்கள் திரும்பப் பெறப்பட்டால் நாம் பேச்சுகளுக்குத் தயார் என்று மேலும் குறிப்பிட்டார். இந்தியாவின் இதயப்பகுதி தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கிறது என்று அருந்ததி ரோய் தனது நேர்காணலில் கூறியிருப்பது அறியப்பட்டதே.