Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

பாஸ்க் பிரிவினைவாதக் குழுவான எட்டா அமைப்பின் ஆயுதக்குழுவின் தலைவர் கைது:ஸ்பெயின் தெரிவிப்பு .

17.11.2008.

ஸ்பெயின் நாட்டில் செயல்பட்டு வரும் பாஸ்க் பிரிவினைவாதக் குழுவான எட்டா அமைப்பின் ஆயுதக்குழுவின் தலைவரைக் கைது செய்ததன் மூலம் அந்த அமைப்புக்கு ஒரு பலத்த அடியயை கொடுத்திருப்பதாக அந்நாடு கூறுகிறது.

இதன் மூலம் எட்டா அமைப்பு பலவீனப்பட்டுள்ளதாகவும், பிரிவினைவாத வன்முறையை எதிர்க்கும் சண்டையில் தாம் ஒரு பெரிய முன்னேற்றம் கண்டுள்ளதாகவும் ஸ்பெயின் நாட்டின் பிரதமர் ஜோஸ் லூயிஸ் ஜாபேட்ரோ தெரிவித்துள்ளார்.

மிக்கெயில் கேர்கொயிட்ஸ் அஸ்பியாழு ருபைனா திங்கட்கிழமையன்று பிரான்ஸ் நாட்டில் ஸ்பெயினுடனான எல்லைப் பகுதியில் தடுத்து வைக்கப்பட்டார்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் போர் நிறுத்தத்திலிருந்து அந்த அமைப்பு வெளியேறிய பிறகு ஸ்பெயின் மற்றும் பிரான்ஸ் நாட்டில் நடைபெற்ற பல தொடர் தாக்குதல்களுக்கு இவரே முக்கிய சூத்திரதாரி என்று குற்றம் சாட்டப்படுகிறது.

எட்டா அமைப்பு பலவீனப்பட்டுள்ளது என்பது உண்மைதான் என்றாலும், கடந்த காலங்களில் இவ்வாறு முக்கிய உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டதையடுத்து புதிய தாக்குதல்களும் நடைபெற்றுள்ளன என்று செய்தியாளர்கள் கூறுகிறார்கள்.

 

Exit mobile version