Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

செய்தித் திருத்தம்: பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட சிறுமியின் உறவினரும்;மகளீர் அமைப்பின் செயலாளருமான பெண் அதிரடிப்படையினரால் கொலை.

03.03.2009.

கடந்த 1ம் திகதி களுவாஞ்சிக்குடிப் பிரதேசத்தில் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட 14 வயதுச் சிறுமியான புனிதவதியின் உறவினரும் மகளீர் அமைப்பொன்றின் செயலாளருமான 31 வயதுடைய சிவகுமார் மகாதேவி  விசேட அதிரடிப்படையினரால்  கொலை செய்யப்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர். 

இந்த சிறுமியின் வீட்டிற்கு அருகாமையில் வசித்து வந்த மகாதேவி கிராமத்தில் மிகவும் துடிப்புள்ள பெண் எனவும் சமூகசேவையில் ஆர்வம் கொண்டவர் எனவும் மக்கள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் சிறுமியை பாலியல்வல்லுறவுக்கு உட்படுத்தியமை  குறித்து  இவர் அதிகளவில் தகவல்களை திரட்டியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதனைத்  தொடர்ந்து நேற்றைய தினம் (2ம் திகதி) இரவு இவரது வீட்டுக்குச் சென்ற விசேட அதிரடிப்படையினர் இப் பெண்ணின் கணவனைத் தாக்கி 200 மீற்றர் தூரத்தில் கட்டி வைத்த பின் மனைவியைக்  கொலை செய்து கிணற்றில் போட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்போது இவரிடம் இருந்த 3 லட்சம் ரூபா பணமும் பெறுமதி மிக்க நகைகளும் கொள்ளையிடப்பட்டதாக வீட்டார் தெரிவித்துள்ளனர்.

கொலை செய்யப்பட்ட மகாதேவியின் சடலம் இன்று காலை கிணற்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. இதனைப் பிரதேச சபைத் தலைவரும்; உறுதிப்படுத்தியுள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமி களுவாஞ்சிக்குடி வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றார்.

 http://www.globaltamilnews.net/

Exit mobile version