மட்டக்களப்ப்பில் குறித்த ஒரு இடத்தில் இருக்கும் விடுதிக்கு அவர்கள் சென்று மாலையானதும் தமது குடும்பத்திற்கு அன்று தேவைப்படும் அத்தியாவசியப் பொருட்களை வாங்கிக்கொண்டு அதே பஸ்சில் வீடு திரும்புகிறார்கள்.
வறுமையின் கோரத்தில் சிக்கியுள்ள ஒரு புதிய சமூகம் வேறு வழியின்றி தம்மை விற்றுப் பிழைக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பது தீபம் தொலைக்காட்சியில் சஞ்சயனின் நேர்கணாலில் வெளித்தெரிகிறது. தாய்லாந்தின் வறுமையை பாலியல் தொழிலாக மாற்றியது வியட்னாமை அழித்துக்கொண்டிருந்த அமரிக்க இராணுவம். இலங்கையில் இது மறுபடி அரங்கேறுகிறது.
இன்னும் சில வருடங்களில் தெற்காசியாவின் பாலியல் மையமாக இலங்கை மாறிவிடுமோ என அச்சம் தோன்றுகிறது. மகிந்த ராஜபக்சவின் மாபியா அரசு இலங்கையை தெற்காசியாவின் சுற்றுலா மையமாக மாற்றுவது என்பதன் உள்ளர்த்தம் இதுதானோ?