Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

பாலியல் தொழிலும் போதை மருந்துகளும் பிரித்தானிய பொருளாதாரத்தின் தூண்கள்

prostitionபிரித்தானியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வீதம் அதிகரித்துள்ளதாக ஆளும் சிறுபான்மை அரசு பெருமையடித்துக்கொள்கிறது. மொத்த உள்நாட்டு உற்பத்திற்கும் மக்களின் வாழ்க்கைத்தரத்திற்கும் அதிக தொடர்புகள் இல்லை எனினும் அது மக்கள் சார்ந்தது என்ற விம்பம் வழங்கப்பட்டுள்ளது. மொத்த உள் நாட்டு உற்பத்தியின் பெரும்பகுதி பல்தேசிய நிறுவனங்களின் வருவாயோடு தொடர்புடையது. 2014 ஆம் ஆண்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி பிரித்தானியாவில் அதிகரித்தமைக்கான பிரதான காரணம் பாலியல் தொழிலும், சட்டவிரோத போதை மருந்து வகைகளும் ஆகும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

போதை மருந்து வகைகளி 6.65 பில்லியன்களை பிரித்தானியப் பொருளாதாரத்திற்கு வழங்கியுள்ள அதே வேளை பாலியல் தொழில் 5.65 பில்லியன்களை வழங்கியுள்ளது. இவ்விரு வியாபாரங்களும் சேர்ந்து 12.3 பில்லியன் பணத்தை பிரித்தானிய பொருளாதாரத்தில் உட்செலுத்தியுள்ளதாக Office for National Statistics (ONS) என்ற அமைப்பின் அறிக்கை தெரிவிக்கின்றது.

இத்தொகை பிரித்தானியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 0.7 வீதமாகும். இத்தொகை விவசாயப்பொருளாதாரம் உட்செலுத்திய தொகைக்குச் சமனானதாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

பயங்கரவாதத்திற்கு எதிராகச் செயற்படுகிறோம் என்ற தலயங்கத்தில் ஒவ்வொரு தனிமனிதனையும் கண்காணிக்கும் பிரித்தானிய அரசு பாலியல் தொழிலையும் போதை மருந்தையும் கண்காணிக்க வழியின்றித் தடுமாறுகிறது என்பது கேலிக்கிடமானது என்று பல ஆய்வாளர்கள் கருத்துத் தெரிவித்தனர்.

இளைஞர்களும் குழந்தைகளும் போதை மருந்துகளை உட்கொள்ளும் விகிதம் பிரித்தானியாவில் அதிகரித்து வருகின்றது. அதே வேளை ஆண்களும் பெண்களும் பாலியல் தொழிலில் ஈடுபடும் விகிதமும் அதிகரித்து வருகின்றது என அறிக்கைகள் தெரிவிக்கின்றன. ஒரு புறத்தில் பல்தேசிய நிறுவனங்கள் மக்களின் பணத்தைக் கொள்ளையிட மறுபுறத்தில் போதைப் பொருளும், பாலியல் தொழிலும் வறுமையச் சூறையாகின்றன.

Exit mobile version