பாலியலும் போதைப்பொருளும் பிரித்தானியாவை உலகின் ஐந்தாவது உலகத்தரத்திற்கு அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் உயர்த்தியுள்ளது. மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) என்ற அளவுகோல் நாடுகளின் பொருளாதாரத்தை அளவிடுவதற்காகப் பயன்படுத்தப்படும் முறையாகும். தனி நபர் வருமானத்தோடு நேரடியான தொடர்புகளற்ற மொத்த உள்நாட்டு உற்பத்தி என்பது பொதுவாக ஒரு குறித்த காலத்தில் உற்பத்திசெய்யப்பட்ட பண்டங்களையும், சேவைகளையும் குறிப்பிடுவதாகும். GDP ஐ அளவிடுவதற்கு இரண்டு வேறு முறைமைகள் பயன்படுத்தப்படுகின்றன. ஒவ்வொருவருடைய வருமானத்தையும் கூட்டுவதனூக முதலாவது வகையில் அளவிடப்படுகிறது.
ஒவ்வொருவரது செலவீனங்களையும் கூட்டுவதனூடாகவும் இது பெறப்படுகின்றது. உலகத்தின் 46 வீதமான சொத்துக்களை 1 வீதமான பணக்காரர்களே முடக்கிவைத்திருக்கும் நிலையில் இந்த அளவுகோல் நாட்டின் சரியான பொருளாதார நிலைமைகளை அளவிடுவதற்குப் பயன்படுத்த இயலாது.
உள்நாட்டிலேயே பல்தேசிய நிறுவனங்கள் அதிகமாக வளங்களையும் கூலி உழைப்பையும் சுரண்டும் போது மொத்த உள்நாட்டு உற்பத்தி அதிகரிக்கும். பிரித்தானியா போன்ற ஏகாதிபத்திய நாடுகளின் உள்ளேயே மக்களைச் சுரண்டுவதற்காகப் போதைப்பொருளும் பாலியலும் ஆயுதமாகப் பயன்பட்டுவருகின்றது. கட்டற்ற பாலியல், கூட்டுப் பாலியல் உறவு போன்றவற்றைத் தன்னார்வ நிறுவனங்கள் போன்ற ஏகாதிபத்திய அமைப்புக்கள் என்றுமில்லாதவாறு பிரதானப்படுத்தி வருகின்றன. தொலைக்காட்சி, இணையத் தளங்கள், சமூக வலைத் தளங்கள் போன்றனவும், பின்நவீனத்துவ அமைப்புக்களும், அடையாளக் குழுக்களும் இவற்றை ஊக்குவிக்கின்றன.
இதற்கு எதிரான எதிர்ப்பு சக்திகள் அற்றுப் போன நிலையில் புதிய சந்ததியை போதைப் பொருளுக்குள்ளும், பாலிய வக்கிரங்களுக்குள்ளும் அமிழ்த்திச் சிதைக்கும் நட்வடிக்கை என்றுமில்லாதவாறு முனைப்புப் பெற்றுள்ளது.
பாலியல் தொழில், இணையங்களில் பாலியல் சேவைகள், போதைப்பொருள் விற்பனை போன்றவை பிரதான பங்குவகிக்கின்றன.
பாலியல் மற்றும் போதைப் பொருட்கள் பிரித்தானியப் பொருளாதாரத்தை 2.536 பில்லியன் டொலர்களிலிருந்து 2.82 பில்லியன் டொலர்களாக அதிகரித்துள்ளது.