Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

பாலியல் சாமி பிரேமானந்தாவின் ஆச்சிரமத்திலிருந்து சென்னை வந்த விக்கி சுயநிர்ணைய உரிமை கேட்டார்

பிரேமானந்தா
பிரேமானந்தா

பாலியல் சாமி பிரேமானந்தாவின் சீடர்களில் ஒருவரான வட மாகாண முதலமைச்சர் அவரது ஆச்சிரமத்தில் சென்று ஓய்வெடுத்த பின்னர் சென்னைக்கு வந்து சுயநிர்ணய உரிமை வேண்டும் என்று உரையாற்றினார். 1995ஆம் ஆண்டில், கொலை மற் றும் பாலியல் வன்முறை வழக்குகளில் சிக்கிய பிரேமானந்தாவை காவல்துறையினர் கைது செய்து வழக்கு தொடர்ந் தனர். இந்த வழக்கு களில், புதுக்கோட்டை செசன்சு நீதிமன்றத்தில், பிரேமானந்தாவுக்கு இரட்டை ஆயுள் தண் டனை விதிக்கப்பட்டது. சென்னை உயர்நீதி மன்றம் மற்றும் உச்ச நீதிமன்றங்களில் இந்தத் தண்டனை உறுதி செய் யப்பட்டதைத் தொடர்ந்து கடலூர் மத்திய சிறையில் பிரே மானந்தா அடைக்கப் பட்டு இருந்தார்.

கொலை, பாலியல் வன்முறை வழக்குகளில் இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப் பட்ட பிரேமானந்தா சாமியார், சென்னை தனியார் மருத்துவமனை யில் மரணம் அடைந் தார். சாகும்போது அவருக்கு வயது 60.

பிரேமா னந்தா, இலங்கையில் இருந்து 1983ஆம் ஆண்டில் தமிழ்நாட் டுக்கு வந்தார். திருச்சி அருகில் உள்ள பாத்திமா நகரில் ஆசிரமம் நடத்திப் பிழைத்து வந்தார்.

இன்றும் பிரேமானந்தாவின் ஆச்சிரமம் இயங்கி வருகிறது. அந்த ஆச்சிரமத்திற்கு வருடாவருடம் விக்னேஸ்வரன் வந்துபோவது வழமை.

ஏற்கனவே பிரேமாந்தா சாமி தண்டிக்கப்பட்டது தவறு என்று கூறிவந்த விக்னேஸ்வரன் தான் பிரேமானந்தாவின் மானசீகச் சீடன் என்றும் கூறி வந்தார்.

7ம் திகதி சென்னைக்கு வந்தடைந்த விக்னேஸ்வரன் அதே அன்று திருச்சிக்குச் சென்று பிரேமானந்தாவின் ஆச்சிரமத்தில் தங்கி அங்கிருந்து இன்று மீண்டும் சென்னைக்கு வந்து கே.ஜி,கண்ணபிரான் நினைவுக் கூட்டத்தில் கலந்துகொண்டு அங்கு சுய நிர்ணய உரிமை தேவை என்று பேசினர்.

தகவல் தொழில் நுட்ப யுகத்திலேயே இடத்திற்கு இடம் வெவ்வேறு வகைகளில் பேசிவரும் விக்னேஸ்வரன் ஆயுதப் போராட்டத்தில் ஈட்டுபட்டவர்களுடன் கூட்டுவைத்துக்கொள்ள முடியாது என்று கடந்தமாதம் யாழ்ப்பாணத்தில் கூறினார்.
இன்று இலங்கை அரசு வடக்கில் சிங்களக் குடியேற்றங்களை மேற்கொண்டு இனப்பரம்பலை மாற்றியமைக்க முற்படுகிறது என்று சென்னைக் கூட்டத்தில் கூறினார். இலங்கை அரசிடம் உரிமைகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என்ற நம்பிக்கை இல்லை என்றார். இலங்கை அரசிடம் உரிமைகளைப் பெற்றுக்கொள்ள முடியாது என்பதனால் தான் ஆயுதம் தாங்கிய போராட்டம் ஆரம்பித்தது என்பதையும் அதற்கான தேவை இப்போதும் இருக்கிறது என்ற சிறிய லாஜிக்கையும் சட்டம்படித்த சாமி விக்கி மறந்துவிட்டார்.

சுடநிர்ணயை உரிமை தேவையில்லை என்று கூறிவந்த விக்னேஸ்வரன் இலங்கை அரச நீதிமன்றத்தில் தனது கட்சிக்காரர்களைச் சத்தியப்பிரமாணம் எடுக்கத் தூண்டினார். இப்போது வடமாகாண சபையைக் கலைத்துவிடுவார்கள் என்ற அச்சத்தில் அடக்கி வாசிப்பதாகக் கூறுகிறார். வடமாகாண சபையைக் கலைத்துவிடுவார் என்று அச்சமடைவதற்கு முன்பே மகிந்த ராஜபக்சவின் முன்னால் சத்தியப்பிரமாணம் செய்த விக்னேஸ்வரன் சட்டம் பேசி உரிமைகளைப் பெற்றுவிடுவோம் என்று ஆட்சிக்கு வந்தார். இன்று கையாலாகாத மாகாண சபையை அரசாங்கம் கலைப்பதற்கு முன்னால் தானே கலைத்துவிட்டு பிரேமானந்தா ஆச்சிரமத்தைத் தலைமை தாங்கி நடத்தலாம். அவ்வாறு ஒரு சூழல் ஏற்பட்டால் மக்கள் போராடி உரிமைகளைப் பெற்றுக்கொள்வதற்கான வழிகளைக் கண்டுகொள்வார்கள்.

‘எமது தனித்துவத்தை, சுயநிர்ணய உரிமையை உள்ளடக்கியதாக அரசியல் யாப்பு மாற்றி அமைக்கப்பட வேண்டும். இதனைக் கோர, கொண்டுவர இந்திய அரசாங்கத்திற்குத் தார்மீக உரித்து உள்ளது என்பதைக் கூறி வைக்கின்றேன்.’

என்று வேறு தனது உரையில் கூறினார். தனது நாட்டின் எல்லைக்குள்ளேயே சுயநிர்ணைய உரிமைக்கான போராட்டங்களை மூர்க்கத்தனமாக ஒடுக்கும் இந்திய அரசு ரிமோட் சுய நிர்ணைய உரிமையை அங்கீகரிக்காது என்பதைக்கூட விக்கியால் புரிந்துகொள்ள முடியவில்லை.

Exit mobile version