Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

பாலித கோஹன மீதான வழக்கு..

இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான இனப் படுகொலைப் போரின் இறுதி கட்டத்தில் சரண்டைய வந்த விடுதலைப் புலிகள் பொறுப்பாளர்களை சுட்டுக் கொன்ற போர்க் குற்றத்தில் கூட்டுப் பொறுப்புடைவர் என்ற அடிப்படையில் பன்னாட்டு நீதிமன்றத்தில் ஐ.நா.விற்கான சிறிலங்க அரசின் நிரந்தரத் தூதரான பலித கோஹன மீது வழக்கு தொடரப்படவுள்ளது.

இலங்கையில் போர் நடந்தபோது சிறிலங்க அரசின் செயலராக இருந்த பலித கோஹனா, ஆஸ்ட்ரேலியாவின் குடியுரிமையையும் பெற்றுள்ளார். அந்த அடிப்படையில், அவர் மீது வழக்கு பதிவு செய்யப்படவுள்ளதாக இனப் படுகொலைக்கு எதிரான தமிழர்கள் அமைப்பும், சுவிட்சர்லாந்தின்  தமிழர் பேரவையும் கூறியுள்ளன.

இதே வேளை  பிரித்ட்கானிய தமிழர் பேரவையும்  ஏனைய பல அமைப்புக்களும்  மகிந்த  ராஜபக்சவின்   பிரித்தானிய  வருகையின்  போது  அவருக்கு எதிராக  போர்க்குற்ற  வழக்குத் தாக்கல் செய்வதாகக் கூறியிருந்தன. இதுவரைக்கும்  அவ்வாறான வழக்குகள் எதுவும் பதிவுசெய்யப்படவில்லை என்று தெரியவருகிறது.

Exit mobile version