இதுதான் வழங்கப்பட்ட செய்தி.
இராணுவத்தின் 58ம் படையணியை நோக்கி புலித்தேவன் நடேசன் உட்பட்ட புலி உறுப்பினர்கள் நடந்து செல்கின்றனர். அரை மணி நேரத்தினுள் சரணடைந்த அனைவரும் கொல்லப்படுகின்றனர்.
சரணடையுமாறு செய்தியை தனது கைப்பேசியிலிருந்து அனுப்பியவர், இலங்கை – அவுஸ்திரேலிய இரட்டைப் பிரஜாவுரிமை கொண்ட பாலித கோஹன்ண. இவர் முன்னை நாள் அவுஸ்திரேலிய ராஜதந்திரியும், அவுஸ்திரேலிய வெளிவிகார அமைச்சின் வர்த்தக ஆலோசகருமாவார்.
தற்போதைய ஐ.நா இற்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதியுமாவார். செய்தி அனுப்பியதற்கு மறுப்புத் தெரிவிக்காத பாலித கோஹண்ன, அவர்களுக்குப் பாதுகாப்பு வழங்குவதற்கான தகமை தனக்கு இருந்தில்லை என்கிறார்.
தற்போதைய ஐ.நா இற்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதியுமாவார். செய்தி அனுப்பியதற்கு மறுப்புத் தெரிவிக்காத பாலித கோஹண்ன, அவர்களுக்குப் பாதுகாப்பு வழங்குவதற்கான தகமை தனக்கு இருந்தில்லை என்கிறார். சன்டே ஏஜ் இதழுக்கு இவர் வழங்கியுள்ள செவ்வியிலேயே இவ்வாறு தெரிவிக்கிறார்.
தவிர, தமிழர் ஒருவரின் நேரடிச் சாட்சியமும் இவர்கள் கொலைசெய்யபடதை உறுதிப்படுத்துகிறது. ஆக, ஐக்கிய நாடுகள் சபையின் உள்ளிருக்கும் பாலித போர்க்குற்றச்சாட்டுக்கு உட்படுத்தப்படுவதற்கான உறுதியான ஆதாரங்கள் காணப்படுகின்றன.