Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

பாலஸ்தீன அரசாங்கத்திற்கு மின்னஞ்சல் அனுப்ப தமிழர்களிடம் கோரிக்கை

abbasபாலஸ்தீனில் இலங்கை இனப்படுகொலை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பயணம் மேற்கொண்டது தொடர்பாக பலஸ்தீன தூதரகத்துடனும் பின்னர் பலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாசின் சர்வதேச விவகாரங்களுக்கான ஆலோசகருடனும் (Dr. Majdi Al-Khalidi) பேசப்பட்டது. சுயநிர்ணய உரிமைக்காகப் போராடும் ஒடுக்கப்படும் தேசிய இனம் என்று கூறிக்கொள்ளும் பலஸ்தீனியர்கள் சுயநிர்ணைய உரிமைப் போராட்டத்தை இனப்படுகொலை இனச்சுத்திகரிப்பு வழியாக அழிக்க முற்படும் பேரினவாதிகளோடு எப்படி இருதரப்பு உடன்படிக்கைகளை ஏற்படுத்தலாம் என்று கேட்கப்பட்டது. இலங்கை அரசு இலங்கையில் வாழும் இஸ்லாமியர்கள் மீதான தொடர்ச்சியான திட்டமிட்ட தாக்குதல்களை நடத்திவரும் நிலையில் பலஸ்தீனத்தின் ராஜபக்சவுடனான தொடர்புகள் குறித்துக் கேள்வியெழுப்பப்பட்டது.

இவை குறித்த மேலதிகத் தகவல்களைத் தமக்கு அனுப்பிவைக்குமாறு Dr. Majdi Al-Khalidiகூறினார். இது குறித்த தெளிவான முடிவிற்கு பலஸ்தீன அரசு குறித்த நாட்களுக்குள் வந்து சேராவிட்டால் குர்தீஷ் விடுதலை அமைப்பு உட்பட உலகம் முழுவது உள்ள அமைப்புக்களுக்கு பலஸ்தீனிய அரசின் இஸ்லாமிய விரோத மற்றும் சுயநிர்ணய உரிமை எதிர்ப்புப் போக்குகள் குறித்து அறிக்கை வெளியிடக் கோருவோம் என்று இனியொரு சார்பில் கூறப்பட்டது.
இலங்கையில் சுய நிர்ணய உரிமை கோரும் தமிப்பேசும் தேசிய இனங்கள் ராஜபக்ச அரசின் இனப்படுகொலை குறித்தும், குறிப்பாக போருக்குப் பின்னான இஸ்லாமிய விரோதப் போக்குக் குறித்தும் இற்கு மின்னஞ்சல் அனுப்புமாறு தோழமையுடன் வேண்டுகிறோம்.
மின்னஞ்சல்:
majdikhaldi@gmail.com

Exit mobile version