இதேவேளை இஸ்ரேலிய தலைமைப் படைகளின் அதிகாரியிடம் இது குறித்து ஊடகங்கள் வினவிய போது, தாம் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ளதாகத் தெரிவித்தார். தாக்குதல்களில் பல கட்டடங்கள் நிர்மூலமாக்கப்பட்டுள்ளதுடன் இதுவரை வெளியான தகவல்களின் அடிப்படையில் 11 அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது. இதுவரை 42 பாலஸ்தீனியர்கள் கொன்று குவிக்கப்பட்டுள்ளனர். காசா பகுதிகள் மீது 830 தாக்குதல்களை இதுவரை நடத்தியுள்ளதாக இஸ்ரேலிய தொலைக்காட்சியான சனல் 2 தெரிவித்துள்ளது.
கடந்த 60 வருடங்களாக பல தடவைகள் இஸ்ரேலுக்கு எதிரான போர்க்குற்ற தீர்மானங்களை ஐ.நா மனித் உரிமைப் பேரவை நிறைவேற்றும் அதே வேளை அமரிக்க ஐரோப்பிய நாடுகள் இஸ்ரேலுக்கு அனைத்து இராணுவ உதவிகளையும் வழங்கி வருகின்றன.