பலஸ்தீனத்தை நாடாக ஏற்றுக் கொள்ளும் நடவடிக்கைக்கு இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் கடும் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. ஐக்கிய நாடுகள் பொதுச் சபை வாக்கெடுப்பு முடிவுகளைத் தொடர்ந்து பலஸ்தீன மக்கள் ரமல்லா நகரில் பாரியளவில் கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர்.
பலஸ்தீன நாட்டுக்கான பிறப்பு அத்தாட்சிப் பத்திரத்தை ஐக்கிய நாடுகள் அமைப்பு இன்று வழங்கியுள்ளதாக பலஸ்தீன பிரதமர் அப்பாஸ் குறிப்பிட்டுள்ளார்.
உலகின் ஒடுக்கப்பட்ட மக்களோடு இணைந்த பாலஸ்தீன மக்களின் ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டத்தை தவிர்க்க முடியாத நிலையில் ஐ.நா அங்கிகரித்துள்ளது.