Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

பாலச்சந்திரன் மரணத்திற்கு யார்காரணம் என்று தெரியாத ராஜபக்ச 13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்த அழைப்பு

Mahinda-Modi-01தமிழ் தேசியகூட்டமைப்புடன் 13 திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பான பேச்சுக்களை மேற்கொள்வதற்க்கு தயாராகயிருப்பதாக மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். இந்திய அரசின் நலனுக்கு அமைய இலங்கையில் ஏற்படுத்தப்பட்ட 13 வது திருத்தச் சட்டத்தில் தமிழ்ப் பேசும் சிறுபான்மை இனங்களுக்கு சில சில்லரை உரிமைகள் வழங்கப்பட்டிருந்தன. இச் சட்டத்தை நடைமுறைப்படுத்த இலங்கை பேரினவாத அரசுகள் மறுத்து வருவதும், நடைமுறைப்படுத்துங்கள் என்று இந்தியா அறிக்கைவிடுவதும், இந்தியாவைப் பிடித்து அதனை நடைமுறைப்படுத்துவோம் என வாக்குப் பொறுக்கும் தமிழ்க் கட்சிகள் அறிவிப்பதும் வழமை.

வெற்றுக் காகிதமான 13 வது திருத்தச்சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக மட்டுமே அரைத் தசாப்த்தத்தை அலைக்களித்து ஒடவிட்டிருக்கிறது இந்த மும்முனை நாடகம். இன்று மீண்டும் ராஜபக்ச அழைப்பு விடுத்துள்ளார். தமிழகத்திலிருந்து வெளியாகும் இலங்கை அரசசார்பு ஆங்கில நாழிதழ் இந்து இற்கு வழங்கிய நேர்காணலிலேயே இலங்கைச் சர்வாதிகாரி ராஜபக்ச பேசத் தயார் எனத் தெரிவித்துள்ளார்.
காங்கிரசை அரசியலிலிருந்து அகற்றி பாரதீய ஜனதாவை அதிகாரத்திற்குக் கொண்டுவந்த ‘சாதனை’ பற்றிப் பெருமையடிக்கும் ‘தமிழ்’ நாட்டின் ஈழப் பிழைப்புவாதிகள் மோடி அரசின் ராஜபக்ச சார்பு நிலை குறித்துப் பேசுவதில்லை. ஆனால் ராஜபக்ச வாலை ஆட்டி நன்றி மோடி அரசிற்கு நன்றி தெரிவித்துள்ளார். இந்துவிற்கு வழங்கிய அதே நேர்காணலில் ஐ.நா மனித உரிமைப் பேரவையில் இந்தியாவின் நிலைப்பாட்டிற்கு நன்றி தெரிவித்தார்.

பிரபாகரனின் மகன் பாலசந்திரனின் மரணத்திற்க்கு யார் காரணம் என்பது குறித்து இன்னமும் தெரியவில்லை என்று அந்த நேர்காணலில் ராஜபக்ச மேலும் கூறியுள்ளார். பிர[பாகரனின் மகன் மட்டுமல்ல ஆயிரமாயிரம் குழந்தைகளை கொலைசெய்வதற்கு ஆணை பிறப்பித்தவர் ராஜபக்சவும் அவரின் குடும்பமுமே என உலகம் முழுவதும் அறிந்துவைத்திருக்கிறது.

Exit mobile version