பாலச்சந்திரன் புலிகளின் சிறார் படையணியில் இருந்தவர் எனவும் அவர் கொலை செய்யப்பட்டதாக மனித உரிமை பேரவையில் ஈழவாதிகள் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுக்கு தாம் உரிய பதிலை வழங்க போவதாக மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இந்த பொய்யான குற்றச்சாட்டை இராணுவத்தின் மீது சுமத்த ஏன் நான்கு வருடங்கள் தாமதமானது என தான் கேள்வி எழுப்ப போவதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கான இலங்கை பிரதி வதிவிடப் பிரதிநிதி சவேந்திர சில்வா இலங்கையில் இனப்படுகொலையைத் தலைமைதாங்கிய இராணுவத் தளபதிகளுள் பிரதானமானவர்.
58 ஆவது படைப்பிரிவின் தளபதியான சில்வா இனவழிப்புக் களத்தில் இறுதிவரை ஈடுபட்டவர். வெள்ள முள்ளிவாய்க்கால், கரைய முள்ளிவாய்க்கால், பின்னதாக நந்திக் கடல்வரை சாரிசாரியாக மனிதர்கள் கொல்லப்படக் கரணமானவர்.