Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

பாலகுமார், யோகி உயிருடன் உள்ளனர்..

தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர்களான யோகி மற்றும் பாலகுமார் ஆகியோர் உயிருடன் இருப்பதாக சிறீ லங்கா கார்டியன் செய்தித்தளம் இராணுவத் தொடர்பாளர் ஒருவரை ஆதாரம்காட்டிச் செய்தி வெளியிட்டுள்ளது. உயர் இராணுவப் பாதுகாப்புடன் யோகி, பாலகுமார் ஆகியோர் உட்பட புலிகளின் பல முக்கிய உறுப்பினர்கள் உயர் பாதுகாப்புடன் கூடிய இரகசிய இடம் ஒன்றில் சிறை வைக்கப்பட்டிருப்ப்தாக இராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
புதுவை இரத்தினதுரை, பாப்பா, யோகி, பாலகுமார், திலகர், லோரன்ஸ் போன்ற முக்கிய உறுப்பினர்கள் 50 பேர் வரை வன்னியிலிருந்து பஸ் ஒன்றில் ஏற்றிச் செல்லப்பட்டதற்கான நேரடிச் சாட்சியம் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
புதுவை இரத்தினதுரை புலிகள் அமைப்பில் இணைந்து செயற்படுவதற்கு முன்பதாக நீண்டகால இடது சாரி அரசியல் வரலாற்றைக் கொண்டவர். 80 களின் ஆரம்பத்தில் விடுதலை இயக்கங்கள் பலம்பெற்ற வேளையில் முதலில் தமிழீழ விடுதலை இயக்கத்தின்(TELO) கலாச்சாரப் பிரிவிற்குப் பொறுப்பாகச் செயற்பட்ட புதுவை இரத்தினதுரை TELOஇயக்கம் அழிக்கப்பட்ட பின்னர் விடுதலைப் புலிகளுடன் இணைந்துகொண்டார்.
பாலகுமார் ஈரோஸ் (EROS)இயக்கத்தின் செயலாளராக இருந்தவர். அந்த இயக்கம் அழிக்கப்பட்ட பின்னர் புலிகள் அமைப்பில் இணைந்துகொண்டார்.

Exit mobile version