பிரபாகரனின் தயார் ஆறு மாதகால வீசா பெற்று சிகிச்சைக்காக சென்னை வந்த போது கருணாநிதியின் தூண்டுதலின் பேரில் மத்திய மாநில அதிகாரிகள் அவரை இரக்கமற்ற முறையில் திருப்பி அனுப்பினார்கள்.இதுகுறித்து தமிழகத்தில் சர்ச்சை எழுந்தது. இந்த நிலையில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அவரை தமிழகத்தில் தங்க வைத்து சிகிச்சை அளிக்க அனுமதிக்கவும், சிகிச்சை செலவை ஏற்றுக்கொள்ளவும் மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று மனு தாக்கல் செய்யப்பட்டது.இந்த வழக்கை ஐகோர்ட்டு விசாரித்து, சிகிச்சை பெறுவது தொடர்பாக தமிழக அரசுக்கு பார்வதி அம்மாள் மனு கொடுக்க வேண்டும் என்றும், அதை மத்திய அரசுக்கு தமிழக அரசு அனுப்பி வைக்க வேண்டும்’ என்றும் உத்தரவிட்டது.இந்த நிலையில் சில நிபந்தனைகளுடன் பார்வதி அம்மாளுக்கு சிகிச்சைக்கான அனுமதியை மத்திய அரசு வழங்கியது. ஆனால் அதை பார்வதி அம்மாள் ஏற்றுக்கொள்ளவில்லை. எனவே பல நிபந்தனைகளை மத்திய அரசு தளர்த்தியது.இந்த நிலையில் வழக்கு, நீதிபதிகள் தர்மராவ், கே.கே.சசிதரன் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. மத்திய அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சோலிசிட்டர் ஜெனரல் ரவீந்திரன், இந்திய தூதரகம் மூலம் மலேசிய அரசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்தார். பார்வதி அம்மாள் இலங்கைக்குச் சென்றுள்ளதால், அங்குள்ள இந்திய தூதரகம் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டு இருப்பதாகவும் அவர் கூறினார்.அதற்கு நீதிபதிகள், அவரிடம் எப்போது இந்த தகவல் கூறப்பட்டது? அதற்கு பார்வதி அம்மாள் என்ன பதில் சொன்னார்? போன்ற விவரங்களை இன்னும் சில நாட்களுக்குள் மனுவாக மத்திய அரசு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.