Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

பார்வதியம்மாள் : கருணாநிதி போட்ட இரக்கமற்ற நிபந்தனைகள்.

சிகிச்சைக்காக ஆறு மாத விசா பெற்று சென்னைக்கு வந்த பார்வதியம்மாளை திருப்பி அனுப்பிய மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக தமிழகத்தில் அதிருப்தி எழ சில நிபந்தனைகளோடு பார்வதியம்மாளை அனுமதிக்கும் படி மத்திய உள்துறைக்கு கடிதம் எழுதினார் கருணாநிதி. ஆனால் அது என்ன நிபந்தனைகள் என்பது ரக்சியமாக இருந்த நிலையில் நிபந்தனைகள் ஊடகங்களில் வெளியாக நேற்று டில்லியில் பேசிய கருணாநிதி நிபந்தனைகள் குறித்துக் கேட்டதற்கு மழுப்பலாக பதிலளித்துள்ளார். ஆனால் அவர் போட்டுள்ள கராரான மூன்று நிபந்தனைகளுமே நோயால் பாதிக்கப்பட்டுள்ள ஒரு முதிய பெண்ணின் மனித உரிமைகளை மறுப்பதாக உள்ளது.

நிபந்தனை-1 அரசுச் செலவில் மருத்துவ சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும். அவரது பாதுகாப்புப் பொறுப்பை தமிழக அரசே ஏற்கும்.

நிபந்தனை-2 அவர் எங்கு சிகிச்சை பெற வேண்டும் என்பதை தமிழக அரசே தீர்மானிக்கும்.

நிபந்தனை-3 சிகிச்சை முடிந்தவுடன் அவர் எந்த நாட்டிலிருந்து வந்தாரோ அங்கு திரும்பிச் செல்ல வேண்டும் .

முதிய வயதில் பார்வதியம்மாளை குடும்பத்தினரின் மேற்பார்வையிலிருந்து பிரித்து தங்கள் கட்டுப்பாட்டில் வைப்பதன் மூலம் அவரை தமிழக ஈழ ஆதரவாளர்கள் சென்று பார்ப்பதை தடுக்க நினைக்கிறது கருணாநிதி அரசு. தவிறவும்.பார்வதியம்மாள் எந்த வகையிலும் தமிழகத்தில் நிரந்தரமாக தங்கியிருப்பதை கருணாநிதி விரும்பவில்லை. காரணம் இன்னமும் அவர் பிரபாகரனைப் பார்த்து அச்சம் கொள்கிறார். அதனால்தான் பார்வதியம்மாளுக்கு இங்கிருக்கிற காலத்தில் ஏதாவது ஒன்று ஆனால் அது தனக்கு எதிராகத் திரும்பும் என்கிற அச்ச உணர்வில் இப்படி முதிய பெண்ணுக்கு மனித நேயமற்ற முறையில் நிபந்தனைகளை விதிக்கிறார் கருணாநிதி. சுயமரியாதை இழந்து இந்த நிபந்தனைகளை ஏற்றுக் கொண்டு சிகிச்சைக்கு பார்வதியம்மாள் செல்வாரா? அல்லது கருணாநிதியின் நிபந்தனைகளை நிராகரிப்பாரா? என்பதுதான் இப்போதுள்ள கேள்வி.

Exit mobile version