துப்பாக்கி சூட்டில் ரேகன் ஸ்தலத்திலேயே கொல்லப்பட்டுள்ளார். மாவீரர் தினத்தை இதுவரை காலமும் நடத்திவந்த ரேகன் அவர்களுக்கு சமீபகாலமாக பல அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டு வந்தது. இந் நிலையில் இன்று பின்னிரவு(08.11.2012) பேருந்து நிலையம் ஒன்றில் நின்றிருந்த அவரை நோக்கி 4 தடவைகள் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
தமிழ் குழு ஒன்றினாலேயே இத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக அறியப்படுகிறது. சுட்டவர்கள தாம் பார்த்ததாக ஒரு தமிழர் கூறியுள்ளார் என சில செய்தி இணையங்கள் தெரிவிக்கின்றன.
பருதியின் கொலை விடுதலைப் புலிகள் சார்ந்த குழுக்கள் இடையேயான மோதலின் அடுத்த கட்டமாக இருக்கலாம் என ஊகிக்க இடமுண்டு. அதே வேளை இன்று இலங்கை அரசு உட்பட உலகின் உளவு நிறுவனங்களின் ஆடுகளமாக மாறியுள்ள புலம்பெயர் தமிழர் அரசியல் மாபியாக் குழுக்களின் அரசியல் வடிவத்தை நோக்கி நகர்கிறது. தொடர்ச்சியான இவ்வகையான கொலைக் கலாச்சாரம் பல எதிர்மறையான விளைவுகளையே ஏற்படுத்தும்.