குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் மகேஸ்பெரேரா மற்றும் உதவி பொலிஸ் அத்தியட்சகர் அம்பாவில என்ற அதிகாரி, சட்டமா அதிபர் திணைக்களத்தின் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் புவனேக அலுவிகார ஆகியோர் இணைந்து இந்த B அறிக்கையைத் தயாரித்துள்ளனர்.
இந்த B அறிக்கைியல் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் ‘த ஐலண்ட்’ பத்திரிகை வெளியிடுவதற்கு தயாராகி வருவதாக அந்த நிறுவனத்தில் பணியாற்றும் ஒற்றர் ஒருவர் மூலம் பாதுகாப்புச் செயலாளருக்கு அறியக் கிடைத்துள்ளது. இதனையடுத்து பத்திரிகையின் ஊடகவியலாளர் ஒருவருடன் தொடர்புகொண்ட பாதுகாப்புச் செயலாளர் முல்லேரியா சம்பவம் தொடர்பாக நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட B அறிக்கையில் உள்ள விடயங்களை பத்திரிகையில் பிரசுரிக்க வேண்டாம் எனக் கோரியுள்ளார்.
இதனைடுத்து ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவும் தனியார் ஊடகங்களின் தலைவர்கள் சிலரைத் தொடர்புகொண்டு பாதுகாப்புச் செயலாளருக்கு நெருக்கடி ஏற்படும் வகையிலான விடயங்களை வெளியிட வேண்டாம் எனவும் பாரதவின் கொலை தொடர்பான தகவல்கள் வெளியிடுவதைக் குறைத்துக் கொள்ளுமாறும் கோரியுள்ளார்.