Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

பாபர் மசூதி இடிக்கப்பட்ட தினம் டிசம்பர் 6ம் திகதி

இந்து அடிப்படைவாதிகளால் பாபர் மசூதி அழிக்கப்பட்ட தினமாக டிசம்பர் 6 ம் திகதி நினைவு கூரப்படுகின்றது. இது குறித்தான தீர்ப்பு ஒன்றை கடந்த வருடம் இந்து அடிப்படைவாத நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தமை அறியப்பட்டதே.
நினைவு தினத்தை ஒட்டி இன்று – 04/12/2011 – ஞாயிற்றுக்கிழமை -முதல் எழும்பூர், சென்டிரல் ரயில் நிலையத்தில் இருந்து ரயில்களில் 3 நாட்கள் பார்சல் அனுப்ப தடை விதிக்கப்பட்டுள்ளது.

சென்ரல் ரெயில் நிலையத்தின் 5 முனை வாசல்களில் 2 வாசல் வழியாக மட்டும் பயணிகள் ரெயில் நிலையத்தின் உள்ளேயும், வெளியேயும் செல்லவும் போலீசார் அனுமதித்து வருகின்றனர்.

மேலும் பயணிகள் கொண்டுவரும் பொருட்களை போலீசார் மெட்டல் டிடெக்டர் கொண்டு சோதனை செய்து வருகின்றனர். துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் நிறுத்தப்பட்டுள்ளனர்.ரெயில் நிலையத்தில் உள்ள சுழலும் கேமராக்கள் மூலம் ரெயில் நிலையத்தை போலீசார் 24 மணி நேரமும் கண்காணித்து வருகின்றனர்.இதேபோல் சென்ட்ரல் புறநகர் மின்சார ரெயில் நிலையத்திலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
தொடர்புடைய பதிவுகள்:

பாபர் மசூதி – உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் பின்னணியில்…

அயோத்தி : இராமன் தொடுத்த வழக்கு! குரங்கு எழுதிய தீர்ப்பு!! – தோழர் மருதையன்

Exit mobile version