Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

பாதுகாப்பு தரப்பினருக்கு தெரியாமல் குற்றச் செயல்கள் இடம்பெற வாய்ப்பில்லை :பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்

வடக்கில் சுமார் 55000 பாதுகாப்புப் படையினர் நிலைநிறுத்தப்பட்டுள்ள நிலையில் வடக்கு மக்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படவில்லை என அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் சுட்டிக்காட்டியுள்ளது.

2006ம் ஆண்டு புள்ளி விபரத் தரவுகளின் அடிப்படையில் வடக்கில் 559000 மக்கள் வாழ்வதாகவும் 55000 பாதுகாப்பு படையினர் நிலை நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் உந்துல் பிரேமரட்ன தெரிவித்துள்ளார்.

வடக்கில் இடம்பெற்று வரும் கொலைகள், கடத்தல்கள் மற்றும் கப்பம் கோரல் சம்பவங்களை ஏன் அரசாங்கத்தினால் தடுத்து நிறுத்த முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

யாழ்ப்பாண மக்கள் தங்களை எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது என்பது தொடர்பில் காவல்துறையினர் துண்டுப் பிரசூரங்களை விநியோகம் செய்துள்ளதாகவும், இதனால் மூலம் அரசாங்கமும் பாதுகாப்புத் தரப்பினரும் தமது பொறுப்புக்களிலிருந்து விலகிச் செல்கின்றமை புலனாவதாகவும் தெரிவித்துள்ளார்.

ஒரு பெண் தனியாக வீதியில் செல்ல முடியாவிட்டால் காவல்துறையினரும், பாதுகாப்புப் படையினரும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருப்பதில் அர்த்தமென்ன என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

பாதுகாப்பு தரப்பினருக்கு தெரியாமல் குற்றச் செயல்கள் இடம்பெற வாய்ப்பில்லை எனவும், பாதுகாப்புத் தரப்பினரும் ஈ.பி.டி.பி கட்சியும் வடக்கு குற்றச் செயல்களுக்கு பொறுப்பு சொல்ல வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Exit mobile version