இத்தேர்தலுக்கு ஏற்கனவே உள்ள பாதுகாப்பு படையினரோடு, 800 துணை ராணுவப் படையினர் கூடுதலாக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
அத்துடன் ஹிரங்துர்ஜோ சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலும் நடைபெருகிறது. இந்த தேர்தல் வாக்குப்பதிவிற்காக 1,126 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. இவற்றில் 385 வாக்குச்சாவடிகள் கிராமப்புறத்தில் அமைந்துள்ளதால் வேட்பாளர்களை வாக்காளர்கள் எளிதில் அடையாளம் காணும் வகையில் வேட்பாளர்களின் புகைப்படம் பொறித்த துண்டு சீட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
மிசோராம் தேசிய முன்னணி சுய நிர்ணய உரிமைக்காகப் போராடிய மிசோராம் மக்கள் இன்று மாவோயிஸ்டுக்களுக்கு ஆதரவு வழங்குகின்றனர்.
வாக்குப்பதிவை ஒட்டி எட்டு கம்பெனி மத்திய துணை ராணுவ படையினர் மற்றும் 6 மாநிலங்களில் இருந்து பாதுகாப்பு படை வீரர்கள் மிசோரமில் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த தேர்தலை முன்னிட்டு மியான்மர், பங்களாதேஷ் உள்ளிட்ட சர்வதேச எல்லைகளும் மிசோரத்தை சுற்றியுள்ள மாநிலங்களின் எல்லைகளும் மூடப்பட்டுள்ளது.
7 லட்சத்து 2 ஆயிரத்து 189 வாக்காளர்களைக் கொண்ட மிசோரம் மக்களவைத் தொகுதியில், ஆயிரத்து 126 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. முன்னதாக, மத அமைப்புகள் நடத்திய முழு அடைப்புப் போராட்டம் காரணமாக, கடந்த 9 ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த தேர்தல் இன்றைக்கு ஒத்திவைக்கப்பட்டது.