பாதுகாப்புச் சபையில் சீனா ரஷ்யா வீட்டோ பிரயோகிக்க இந்தியா பங்கெடுக்கவில்லை
இனியொரு...
சிரியாவை தடை விதிக்கும் தீர்மானம் ஒன்றின் நகலை ஐக்கிய நாடுகள் நிறுவனத்தில் ஐரோப்பிய நாடுகள் முன்வைத்தன. பாதுகாப்புச் சபையில் முன்வைக்கப்பட்ட இத் தீர்மானத்திற்கான வாக்கெடுப்பில் இந்தியா பங்கேற்ற மறுத்த அதே வேளை சீனா, ரஷ்யா ஆகிய நாடுகள் தமது வீட்டோ அதிகாரத்தைப் பிரயோகித்து தீர்மானத்திற்கான நகலை நிராகரித்தன. அமரிக்காவும் அய்ரோப்பிய வல்லரசு நாடுகளும் மத்திய கிழக்கின் எண்ணைவள நாடுகளை ஆக்கிரமிக்கும் நிலையில் புதிய வல்லரசுப் போட்டி உருவாகியிருப்பதை இந்த நகர்வுகள் கோடிட்டுக் காட்டுகின்றன. மத்திய கிழக்கில் அமரிக்க நிறுவனம் ஒன்று அண்மையில் நிகழ்த்திய கருத்துக் கணிப்பில் 80 வீதமான அரேபியர்கள் அமரிக்கா மற்றும் ஐரோப்பாவின் பிரசன்னத்தை எதிர்க்கிறார்கள் என்று தெரியவந்துள்ளது.
செய்மதி ஊடாக இலங்கை இனப்படுகொலையைப் பதிவு செய்து வைத்திருக்கும் அமரிக்கா மற்றும் அய்ரோப்பிய நாடுகள் இது வரை இலங்கைக்கு எதிரான தீர்மானம் எதனையும் பாதுகாப்புச் சபையில் பிரேரிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.