Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

பாதிக்கப்பட்ட தமிழர்களை சந்திப்பதே நோக்கம் நாச்சியப்பன் கூறுகிறார்

இந்திய நாடாளுமன்றக் குழுவின் சிறிலங்கா விஜயம் அங்கு வாழும் தமிழ் மக்களுக்கு நன்மைகள் எதுவும் கிடைக்கப்போவதில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்து குறித்த குழுவிலிருந்து அ.தி.மு.க விலகிக் கொண்டதாக தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா அறிவித்திருந்தார்.
அவரின் அந்தக் கூற்றுக்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில், பாதிக்கப்பட்ட தமிழர்களை நேரடியாகச் சந்திப்பதே தமது சிறிலங்காவுக்கான விஜயத்தின் முக்கிய நோக்கம் என இந்திய காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சுதர்சன நாச்சியப்பன் தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசுடன் இணைந்து இனப்படுகொலையைத் திட்டமிட்டு நடத்திய இந்தியா அரசின் எல்லைக்குள்ளேயே இந்திய அரசைக் கேள்வி கேட்கத் திரணியற்ற இவர்களின் இலங்கைக்கான பயணத்தின் நோக்கம் சந்தேகத்திற்கு இடமானது. ஈழத்திலிருந்து அகதிகளாக இடம்பெயர்ந்த தமிழர்களை மட்டுமல்ல தமிழ் நாட்டில் ஒடுக்கப்பட்டவர்களையே அடிமைகளாக நடத்தும் ஜெயலலிதாவிற்கும் நாச்சியப்பனுக்கும் எந்த வேறுபாடும் கிடையாது.

Exit mobile version