Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

பாண்டி பஜார் துப்பாக்கிச் சூட்டு வழக்கிலிருந்து பிரபாகரனின் பெயர் நீக்கம்

சென்னை பாண்டி பஜாரில் உமாமகேஸ்வரனைக் கொலை செய்ய மேற்கொள்ளப்பட்ட முயற்சியில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.
துப்பாக்கி சூட்டு சம்பவ வழக்கில் இருந்து தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பெயர் நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்திய புலனாய்வுப் பிரிவினர் தாக்கல் செய்த மனுவை சென்னை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு, பிரபாகரனின் பெயரை நீக்கியுள்ளது.
குற்றம் சுமத்தப்பட்டவர்களில் நிரஞ்சன் மற்றும் பிரபாகரன் இறந்துவிட்டதாகவும் ஏனைய இருவர் குறித்த தகவல்கள் தெரியாது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Exit mobile version