குர்தீஸ் மக்களின் தேசிய விடுதலைக்காகப் போராடும் குர்தீஷ் தொழிலாளர் கட்சி என்ற கம்யூனிஸ்ட் கட்சி உலகின் அனைத்து ஏகபோக அரசுகளால் தாக்கப்பட்டும், வெல்லப்பட இயலாமலிருப்பதற்கு அவர்களின் திட்டமிட்ட கலை கலாச்சார வளர்ச்சியும் காரணமாகவிருக்கின்றது.
பிரித்தானியாவில் பல்வேறு கல்விக் கூடங்களையும் கலை கலாச்சார மையங்களையும் நடத்திவரும் குர்தீஷ் அமைப்புக்கள் தமது குழந்தைகளுக்கு மனிதாபிமானத்தையும் மனித நேயத்தையும் கூட்டுணர்வையும் நேர்மையையும் போர்க்குணத்தையும் அறிமுகப்படுத்தும் பாடத்திட்டங்களையும் கலை கலாச்சார மையங்களையும் நடத்தி வருகின்றன.
யாழ்ப்பாணத்துச் பின் தங்கிய சிந்தனையை அப்படியே பெயர்த்துவைத்து புலம்பெயர் குழந்தைகளுக்குக் கல்வி என அறிமுகப்படுத்தும் புலம்பெயர் நாடுகளிலுள்ள தமிழ்க் கல்விக்கூட ஆசிரியர்கள் 70 இற்கும் மேற்பட்ட பகுதிநேரப் பாடசாலைகளிலிருந்து கலந்துகொண்ட பயிற்சி நிகழ்வு ஒன்று இன்று நடைபெற்றது.
பயிற்சி என்பது மற்றொரு தளத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு புதிய சமுதாயத்தை உருவாக்கப் பயன்படுத்தப்பட வேண்டும்.
பாட்டி வடைசுட்ட கதையை மனித நேயத்தை அறிமுகப்படுத்தவும் நேர்மையக் கற்பிக்கவும் உரிமை கோரப் பயிற்றுவிக்கவும் எப்படிப் பயன்படுத்தலாம் என்பதை முனைவர் பர்வீன் சுல்தானா சுவையுடன் கூறுகிறார். இந்தச் சந்தர்ப்பத்தில் இது முக்கியத்துவம் வய்ந்தது.