பாட்டாளி மக்கள் கட்சியின் இராமதாஸ் ஓராண்டு படுகொலை நினைவு நிகழ்வுகளில் இருந்து ஒதுங்கினார்.
இனியொரு...
தமிழக அரசியலில் எத்தனையோ சந்தர்ப்பாதிகளைப் பார்திருக்கிறோம். ஆனால் அப்பட்டமான சந்தர்ப்பாதிவாக அவமானப்பட்டது டாக்டர் இராமதாஸ்தான். ஈழத்தில் போர் நிறுத்தம் கோரி தமிழக மக்கள் போராடிய போது அந்தப் போராட்டங்களை திமுக தலைவர் கருணாநிதிக்கு எதிராக மட்டும் நிறுத்தி மத்திய காங்கிரஸ் அரசையோ சோனியா காந்தியைப் பற்றியோ எதுவும் விமர்சிக்காமல் காய் நகர்த்தி வந்தவர் இராமதாஸ். கடைசி வரை தன் மகன் அன்புமணி இராம்தாசை பதவியில் அமர்த்திக் கொண்டே ஈழத்தில் போர் நிறுத்தம் கோரி போராடுவதாக பாவனை செய்து வந்தவர் இராமதாஸ். சென்ற வருடம் போர் நிறுத்தம் கேட்ட மாதங்களில் இலங்கைத் தமிழர் பாதுகாப்பியக்கம் பழ. நெடுமாறனால் துவங்கப்பட்ட போது அதில் இணைந்து எல்லா சந்தர்ப்பவாதிகளைப் போலவும் நடந்து கொண்ட இராம்தாஸ் இப்போது இலங்கைத் தமிழர் பாதிகாப்பியக்கத்தில் இருந்தும் விலகி விட்டதாகத் தெரிகிறது. வருகிற மே- 18 ஆம் நாள் இனக்கொலை எதிர்ப்பு பொதுக்கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியும் இராம்தாசும் கலந்து கொள்ள வில்லை என்று தெரிகிறது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டு எல்லா தொகுதிகளிலும் இராமதாஸ் தோற்றார். இந்நிலையில் ஜெயலலிதாவும் அவரைக் கொண்டு கொள்ளாத நிலையில் இப்போது கருணாநிதியிடம் மீண்டும் சரணடைய எல்லா கீழ்த்தரமான வேலைகளையும் செய்கிறார். திமுக ஈழப் பிரச்சனையிலும், இலங்கையின் தேசிய இனப்பிரச்சனையிலும் தமிழர்களுக்கு எதிரான நிலை எடுத்து செயல்படுவதால் ஈழ மக்களுக்கு ஆதரவான கூட்டத்தில் கலந்து கொண்டால் அது திமுகவுடன் நெருங்குவதில் பாதங்களை ஏற்படுத்தலாம் என இராமதாஸ் நினைப்பதால் இலங்கைத் தமிழர் பாதுகாப்பியக்கத்திலிருந்து ஒதுங்கியிருக்கலாம் என கருதப்படுகிறது.