பாடசாலை அதிபர்கள் 10 நாட்கள் இராணுவப் பயிற்சி எடுக்கவேண்டும் : கோட்டாபய
இனியொரு...
இலங்கையில் தெரிந்தெடுக்கப்படும் பாடசாலை அதிபர்கள் 10 நாள் பயிற்சிக்குப் பின்னfர் இராணுவ உயர்பதவிக்குரிய கேணல்களாகக் கருதப்படும் பதவி வழங்கிக் கௌரவிக்க்கப்படுவார்கள் என கோட்டாபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். இலங்கை சர்வாதிகா அரச பயங்கரவாதத்தைத் திட்டமிடுபவர் எனக் கருதப்படும் கோட்டாபய ராஜபக்ச இலங்கையை இராணுவ மயமாக்கும் பல்வேறு திட்டங்களை முன்வைப்பவர். அந்தவகையில் இந்தத் திட்டமும் முன்வைக்கப்பட்டுள்ளது.
நாட்டின் உளவுத்துறை ஆளும் ராஜபக்ச குடும்பத்திற்கு எதிரணிகள் குறித்த தகவல்களை வழங்குமாறு தகவமைக்கப்பட்டுள்ளது.
ஆளும் குடும்பத்தைப் பாதுகாக்கும் இராணுவ மயமாக்கலும் அதற்கு எதிரான போராட்டங்களை எதிர்கொள்ள இனச்சுத்திகரிப்பும் என்ற கொள்கையை இலங்கை அரசு பின்பற்றி வருகிறது.