Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

பாசிஸ்ட் முன்னால் முன்னை நாள் நீதிபதி சத்தியப்பிரமாணம் : வரவேற்கும் பேரினவாதிகள்

C.V.-Wigneswaranஇலங்கையில் மேட்டுக்குடி தமிழ் அரசியலது ஊற்றுமூலமாகவிருந்த தமிழரசுக் கட்சி மற்றும் தமிழர் விடுதலைக் கூட்டணி போன்றவை தமிழ் மக்கள் மத்தியில் இனவாத அரசியலை முன்னெடுக்கும் அதே வேளை இலங்கை அரச அதிகாரத்துடன் நட்புறவையுமே பாராட்டி வந்தன.

சிங்கள மக்களைக் கூட தெருத்தெருவாகச் சுட்டுக்கொல்லும் அதி பயங்கர பாசிஸ்ட் ராஜபக்ச முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொள்வது நல்லிணக்கத்திற்கான முதற்படி என போலி இடதுசாரி – இனவாதக் கட்சி ஜே.வி.பி கூறியுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இந்த தீர்மானமானது அவர்கள் தமது பிரிவினைத் திட்டத்திலிருந்து விலகி வந்துள்ளதை காட்டுகின்றது என்று மக்கள் விடுதலை முன்னணியின் பேச்சாளரான விஜித்த ஹேரத் எம்.பி தெரிவித்தார்.

மற்றொரு பேரினவாதக் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியும் சத்தியப்பிரமாணத்தை நல்லிணக்கம் என வரவேற்றுள்ளது.
தமிழ்ப் பேசும் மக்கள் மீதான ஒடுக்குமுறை குறித்து சிங்கள மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்குப் பதிலாக ஒடுக்கப்படும் தமிழர்கள் மேலும் ஒடுங்கிப் போகின்றார்களா எனபதை கண்டறிந்து எதிர்ப்பவர்களை அழிப்பதே பேரினவாதக் கட்சிகளின் செயற்பாடு.

Exit mobile version