பாசிச ஆட்சியின் ஒரு அங்கமாக வடக்கில் நடக்கும் வடமாகாண சபைத் தேர்தலை மக்கள் நிராகரிக்க வேண்டும் என்பதையும் அது எவ்வாறு பாசிசத்தின் அரசியல் கூறாக மாற்றப்பட்டுள்ளது என்பதையும் விக்னேஸ்வரனின் முன்னுக்குப் பின் முரணான உரைகளே தெளிவுபடுத்துகின்றன. இலங்கை அரசியல் சட்டப்படி பிரிவினைக்கான கோரிக்கை சட்டவிரோதமானது. ஆனால் தாம் சமஷ்டியை மட்டுமே கேட்கிறோம் என்று சுய நிர்ணயத்தையே நிராக்கரிக்கும் தேசிய வாதக் கட்சி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தம்மை விதேசியகள் என நிறுவியுள்ளது. தேசியம் என்பது அன்னிய நலன்களுக்கு அடிபணிந்து தமது இந்திய மேற்கத்தய எஜமானர்களின் கட்டளைக்கு இணங்க பாசிச அரசை ஏற்றுக்கொள்ளும் விக்னேஸ்வரன் குழு வடக்குக் கிழக்கு இணைப்பைக் கூட தேர்தலின் முன் நிபந்தனையாக முன்வைக்கவில்லை. ராஜபக்ச அரசின் இன அழிப்பை பயங்கரவாதத்தின் மீதான வெற்றி என மார்தட்டிய தமிழ் அரசியல் கட்சிகள் தேசியக் கூட்டமைப்போடு இணைந்த நச்சு இரசாயனக் கலவையான கூட்டமைப்பையும் அவர்களுக்கு எதிராக வாக்குப் பொறுக்கும் அரச துணைக் குழுக்களையும் மக்கள் நிராகரிக்க வேண்டும்.பிரபாகரன் கேட்டதையே தமிழ்தேசிய கூட்டமைப்பும் கேட்பதாக சிறீலங்காவின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்திருக்கும் கருத்து மிகவும் வெட்கத்திற்குரியது என தமிழ்தேசிய கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
சட்டம் படித்ததாக கூறிக்கொள்ளும் ஒருவருக்கு தனிநாட்டு கோரிக்கைக்கும், சமஷ்டிக்கும் வித்தியாசம் தெரியாதா எச்னவும் கேள்வி எழுப்பியுள்ளார் சீ.வி.விக்கினேஸ்வரன்.
யாழ்.நாவாந்துறை முத்தமிழ் கலையரங்க அரங்கில் நடைபெற்ற கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.