Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

பாசிச அரசின் ஊதுகுழல் தவராஜாவும் அண்ணார்ந்து பார்க்கும் கூட்டமைப்பும்

thavarajaவடமாகாண எதிர்க்கட்சித் தலைவர் எஸ்.தவராஜா ஏற்பாடு செய்திருந்த ஊடக மாநாடு நேற்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. அதில் அவர் கலந்து கொண்டு உரையாற்றும் போது ஏனைய மாகாணங்களை விட வட மாகாணத்திற்கே இலங்கை அரசு அதிக கவனம் செலுத்துவதாகக் கூறினார்.

இதுதவிர மத்திய அரசாங்கமும் வடமாகாண சபைக்கு பெருமளவு நிதியை செலவிடுகிறது. வடக்கில் 18 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற அடிப்படையில் ஆசிரிய விகிதாசாரம் காணப்படுகிறது. ஏனைய மாகாணங்களில் 19.1 என்ற அடிப்படையே காணப்படுகிறது.

வன்னியில் இனக்கொலையில் கொல்லப்பட்டவர்களே 4 ஆயிரம் பேர் மட்டும் தான் என்று புள்ளிவிபரம் கூறும் இலங்கை அரசின் திரிபை மக்கள் தவரஜா மக்கள் மத்தியில் திணிக்க முயல்கிறார்.

இராணுவத்தின் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் வட மகாணம் இராணுவக் குடியேற்றமாக மாறி வருகின்றதுவடக்கில் யுத்தத்தால் அழிக்கப்பட்ட பாடசாலைகள் இன்னும் புனரமைக்கப்படவில்லை. கல்வித்தரமும் கல்வி வசதியும் தாழ்ந்து போயுள்ளது. வசதியுள்ள மாணவர்கள் தனியார் கல்வி நிலையங்களுக்குச் செல்கின்றனர். இந்த நிலையில் தவராசாவின் புள்ளிவிபரம் ஏனைய காரணிகளைக் கருத்தில் கொள்ளாமல் பேரினவத சர்வாதிகார மகிந்த குடும்ப ஆட்சியை நியயப்படுத்தும் நோக்கோடு புனையப்பட்டது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மக்களின் சுய நிர்ணைய உரிமையை பாசிச அரசிடம் அடகு வைத்துவிட்டு தவராஜா போன்ற அரச ஊது குழல்களை அண்ணார்ந்து பார்த்துக்கொண்டிருக்கின்றது.

ஈ.பி.டி.பி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகியனவோ ஏகாதிபத்திய நாடுகளோ தமிழ்ப் பேசும் மக்களுக்கானதல்ல.  மக்களின் அமைப்பாக்கும் தந்திரோபாயத்தை முன்வைத்துச் செயற்படுவதன் ஊடாகவே புதிய அரசியல் தலைமை ஒன்றை கட்டமைக்கலாம்.

-NN

பிரித்தானியத் தொலைக்காட்சி ஒன்றில் தவராஜா:

Exit mobile version